» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பொங்கல் பண்டிகை: கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை!

திங்கள் 13, ஜனவரி 2025 4:44:01 PM (IST)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  திருவனந்தபுரம், பாலக்காடு, வயநாடு உட்பட கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா 4 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று போகி பண்டிகையுடன் தொடங்கியுள்ளது. நாளை (14.1.2025) தைப்பொங்கல், நாளை மறுநாள் (15.1.2025) மாட்டுப் பொங்கல், 16-ந்தேதி அன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் புத்தாடை, கரும்பு மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், வெளியூரில் பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருக்கும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். இவ்வாறு, தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. 

பொங்கல் பண்டிகையை கொண்டாட 6 நாட்கள் (ஜனவரி 14 முதல் 19-ம்தேதி வரை) தமிழக அரசு, தொடர் விடுமுறை அறிவித்து உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory