» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் நிர்மலா சீதாராமன்
புதன் 12, ஜூன் 2024 4:07:13 PM (IST)

மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் இன்று பொறுப்பேற்றார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனி மெஜாரிட்டியை பெறாவிட்டாலும், கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியமைத்துள்ளது. இதனிடையே, கடந்த ஜூன் 9ம் தேதி டெல்லியில் நடந்த பிரம்மாண்ட விழாவில் நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். மோடியை தொடர்ந்து, அவரது தலைமையில் மத்திய மந்திரிகள் மற்றும் மத்திய இணை மந்திரிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
நேற்று முன்தினம் (10ம் தேதி) புதிய அமைச்சரவை முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. நிதி, வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் உள்துறை ஆகிய 4 முக்கிய துறைகளை பா.ஜ.க. தன்னிடமே வைத்து கொண்டுள்ளது. உள்துறை அமைச்சராக அமித்ஷாவும், பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங்கும், நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமனும், வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கரும் மீண்டும் பொறுப்பேற்று கொண்டனர்.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் இன்று பொறுப்பேற்றார். அலுவலகம் வந்த அவரை நிதித்துறை செயலாளர் டி.வி. சோமநாதன் மற்றும் பிற உயர் அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். இவருடன் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரியும் உடனிருந்தார். நிதி அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன், தனது ஏழாவது பட்ஜெட்டையும், ஆறாவது முழு பட்ஜெட்டையும் தொடர்ச்சியாக தாக்கல் செய்ய உள்ளார். 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை 18வது மக்களவையில் அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்ற போது மத்திய அமைச்சராக அவரது அரசியல் பயணம் தொடங்கியது. 2014 அமைச்சரவையில், அவர் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை இணை அமைச்சராக தனிப்பொறுப்புடனும் பின்னர் 2017ல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர் 2019-ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மேலும் அவர் தொடர்ச்சியாக ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்து முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
புதன் 31, டிசம்பர் 2025 8:43:39 PM (IST)

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது: தர்மேந்திர பிரதான்
புதன் 31, டிசம்பர் 2025 12:11:35 PM (IST)

கட்டுப்பாட்டை இழந்து அரசுப்பேருந்து மோதி 4 பேர் உயிரிழப்பு: மும்பையில் சோகம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 12:26:02 PM (IST)

இளைஞர் வயிற்றில் இரும்பு ஸ்பேனர்கள் : அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:59:28 AM (IST)

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 118 விமானங்கள் ரத்து
செவ்வாய் 30, டிசம்பர் 2025 11:57:11 AM (IST)

தெருநாய் கணக்கெடுப்பு பணிகளில் ஆசிரியர்கள்: டெல்லி அரசின் உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு!
திங்கள் 29, டிசம்பர் 2025 5:29:38 PM (IST)



.gif)