» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் : அமித்ஷா பேட்டி!

வெள்ளி 11, ஏப்ரல் 2025 5:49:25 PM (IST)



2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் கூட்டணி அமைத்து சந்திக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து அமித்ஷா, இ.பி.எஸ்., அண்ணாமலை ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது அமித் ஷா பேசியதாவது; அனைவருக்கும் பங்குனி உத்தர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ, தலைவர்களும், அ.தி.மு.க., தலைவர்களும் ஒன்றாக இணைந்து கூட்டணியை உருவாக்கி உள்ளார்கள். அடுத்து வரும் தேர்தலை தே.ஜ., கூட்டணியுடன் இணைந்து சந்திப்போம்.

இந்தத் தேர்தலை தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், தமிழகத்தில் இ.பி.எஸ்., தலைமையிலும் சந்திப்போம். 1998 ம் ஆண்டு முதல் பா.ஜ.,வும் அ.தி.மு.க.,வும் தொடர்ந்து கூட்டணி அமைத்து வருகிறது. இது இயல்பான கூட்டணி. ஜெயலலிதா காலம் முதல் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 30 இடங்களில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்று உள்ளது. வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

MALAI MALAIApr 12, 2025 - 11:03:25 AM | Posted IP 104.2*****

ஜெ. ஆட்சியை சீர்குலைத்த சசி & OPS இல்லாமல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பிஜேபி ஐ பாராட்டலாம். ஆனால் அண்ணாமலை இல்லாமல் பிஜேபி தமிழ்நாட்டில் வளராது , அதுவும் நயினார் ஐ நம்பி எப்படி தலைமை பொறுப்பு கொடுத்தார்கள். அவரால் பிஜேபிக்கு மிகவும் பின்னடைவுதான், அவர் திராவிட சப்போர்ட்டர். இந்த விஷயத்தில் பிஜேபி சறுக்கிவிட்டது. it is benefit to DMK

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory