» சினிமா » செய்திகள்
ஐந்து ரூபாய் மருத்துவர் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா!
செவ்வாய் 30, ஜூன் 2026 12:05:34 PM (IST)

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தை, இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான 'கருப்பு' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்காலிகமாக 'சூர்யா 48' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாகக் காயடு லோஹர் நடிக்கிறார். சினிமா வட்டாரங்களின் தகவல்படி, இத்திரைப்படம் தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் மருத்துவச் சேவை வழங்கிய '5 ரூபாய் மருத்துவர்' என்று அழைக்கப்பட்ட திருவேங்கடம் வீரராகவனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகிறது.
இத்திரைப்பட உருவாக்கத்தில் சூர்யாவின் சொந்த நிறுவனமான 'ழகரம் ஸ்டுடியோஸ்' இணைந்து செயல்படுகிறது. 'கருப்பு' திரைப்படத்தைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் சாய் அபியங்கர் சூர்யாவுடன் இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.
இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ், சமூக வலைத்தளப் பக்கத்தில் இத்திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இன்று காலை சென்னையில் எளிமையான பூஜையுடன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசன் படப்பிடிப்புத் தளத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் திடீர் வருகை!
புதன் 26, ஆகஸ்ட் 2026 5:48:05 PM (IST)

யஷ் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் திடீர் விபத்து: 4 பேர் படுகாயம்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:40:34 PM (IST)

கார் ரேஸில் விபத்து: நடிகர் அஜித் குமார் லேசான காயங்களுடன் தப்பினார்!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:31:00 PM (IST)

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்: முதல்வர் விஜய் இரங்கல்
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 3:46:35 PM (IST)

ரஜினியின் ‘தர்மன்’ 2-ஆம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்: வீடியோவை வெளியிட்ட படக்குழு!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:55:30 PM (IST)

தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால் வந்த வினை - நடிகை ஷகிலா வேதனை!
வியாழன் 13, ஆகஸ்ட் 2026 4:42:45 PM (IST)

