» சினிமா » செய்திகள்

யஷ் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் திடீர் விபத்து: 4 பேர் படுகாயம்!

திங்கள் 24, ஆகஸ்ட் 2026 3:40:34 PM (IST)

YASHaCCIDENT.jpg

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சியில், டிஜே ஸ்பீக்கர் தாங்கும் சாரம் சரிந்து விழுந்ததில் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கன்னட நடிகர் யஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்ஸிக்: ஏ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairy Tale for Grown-Ups). இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் வரும் 26-ஆம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. திரைப்படம் வெளியாகவுள்ளதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு நகரங்களில் படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் யஷ்ஷை நேரில் பார்க்கப் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். நிகழ்ச்சி முடிவடையும் தருவாயில் ரசிகர்கள் மத்தியில் யஷ் உரையாற்றினார்.

அப்போது ஆர்வமிகுதியால் ரசிகர்கள் சிலர், மைதானத்தில் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த டிஜே (DJ) ஸ்பீக்கர்களைத் தாங்கி நின்ற இரும்புச் சாரம் மீது போட்டி போட்டுக்கொண்டு ஏறினர். ரசிகர்களின் எடையைத் தாங்க முடியாமல் ஸ்பீக்கர்களுடன் சேர்த்து ஒட்டுமொத்த சாரமும் திடீரெனச் சரிந்து கீழே விழுந்தது.

இந்த விபத்தில் சிக்கி 4 பேர் படுகாயமடைந்தனர். அதில் கல்லூரி மாணவர் ஒருவருக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காயமடைந்த மற்ற மூவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory