» சினிமா » செய்திகள்
ஒரே மாதத்தில் இரண்டு ராஜாக்களை தமிழ் சினிமா இழந்துவிட்டது: கமல்ஹாசன் இரங்கல்!
சனி 27, ஜூன் 2026 5:50:53 PM (IST)
மறைந்த முன்னணி இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் மறைவுக்குத் திரையுலக ஆளுமை கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய பாக்யராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு காரணமாகக் காலமானார். 73 வயதான அவரது மறைவு தமிழ்த் திரையுலகினரிடையேயும் ரசிகர்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாக்யராஜ் மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கமல்ஹாசன் தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பாக்யராஜ் என்கிற ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா" என்று கமல்ஹாசன் தனது பதிவில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கணித மேதை ராமானுஜத்தின் கொள்ளுப் பேத்தியா ப்ரீத்தி முகுந்தன்? - உண்மைப் பின்னணி
திங்கள் 20, ஜூலை 2026 11:58:48 AM (IST)

72வது தேசிய திரைப்பட விருதுகள்: ராயன், கேப்டன் மில்லர், மெய்யழகன் படங்களுக்கு விருதுகள்!
சனி 18, ஜூலை 2026 8:25:07 PM (IST)

ஜனநாயகன்’ பட வெளியீட்டைத் திருவிழா போல் கொண்டாட வேண்டும்: ஆனந்த் அறிவுறுத்தல்!
சனி 18, ஜூலை 2026 4:16:27 PM (IST)

ஹாப்பி ராஜ் படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்த தடை- உயர் நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 6, ஜூலை 2026 12:28:49 PM (IST)

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தில் 6 இயக்குநர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 12:09:16 PM (IST)

அரசன் படம் வசூலில் சினிமா உலகை ஓர் உலுக்கு உலுக்கும்: தயாரிப்பாளர் தாணு நம்பிக்கை!
சனி 4, ஜூலை 2026 5:36:02 PM (IST)

