» சினிமா » செய்திகள்
வடசென்னை 2 விரைவில் தொடங்கும்: தனுஷ், வெற்றிமாறன் தகவல்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:25:24 PM (IST)

வடசென்னை 2 திரைப்படத்தின் பணிகள் மிக விரைவில் தொடங்கும் என 'கர' பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்
தனுஷ் நடித்துள்ள ‘கர’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். வெற்றிமாறன் மேடைக்கு வந்தபோது, அங்கிருந்த ரசிகர்கள் ‘வடசென்னை 2’ எப்போது தொடங்கும் எனக் கோஷமிட்டனர்.
வெற்றிமாறன் விளக்கம்:
ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்த வெற்றிமாறன், "தயாரிப்பாளர் இங்குதான் இருக்கிறார், நாயகனும் (தனுஷ்) இங்குதான் இருக்கிறார். நானும் இங்குதான் இருக்கிறேன். அதனால் சீக்கிரமாக... மிகச் சீக்கிரமாகத் தொடங்குகிறோம்” என ‘வடசென்னை 2’ பெயரைக் குறிப்பிடாமல் சூசகமாகத் தெரிவித்தார்.
தனுஷ் உறுதி: விழாவின் இறுதியில் பேசிய தனுஷ், ரசிகர்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து பேசுகையில், "நான் பேசும்போது இடையில் ‘வடசென்னை 2’ குறித்துக் கேட்பீர்கள் என்பதால் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஜெயிக்கிறோமோ இல்லையோ, முதலில் சண்டையிட வேண்டும். நீங்கள் நினைக்கும் அளவிற்குத் தூரம் இல்லை, காலம் நெருங்கிவிட்டது. அன்புவின் எழுச்சி விரைவில் தொடங்கும்,” எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வால்மீகி ராமாயணா திரைப்படத்திற்கு இளையராஜா இசை: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:45:45 PM (IST)

விஜய்தான் அடுத்த முதல்வர்: நட்டி நட்ராஜ் ஆதரவு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:43:32 PM (IST)

ரஜினி படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி விலகல்?
புதன் 15, ஏப்ரல் 2026 10:34:23 AM (IST)

புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:40:08 PM (IST)

இணையத்தில் ஜனநாயகன் படக்கசிவு: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க ரஜினி, சூர்யா வலியுறுத்தல்!
சனி 11, ஏப்ரல் 2026 5:27:14 PM (IST)

அனிருத் செய்த உதவி.. மேடையிலேயே கண்கலங்கிய விக்னேஷ் சிவன்!
புதன் 8, ஏப்ரல் 2026 5:03:35 PM (IST)

