» சினிமா » செய்திகள்

விஜய்தான் அடுத்த முதல்வர்: நட்டி நட்ராஜ் ஆதரவு!

திங்கள் 20, ஏப்ரல் 2026 3:43:32 PM (IST)



தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராவார் என்று நடிகர் நட்டி நட்ராஜ் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தத் தேர்தலில் விஜய்யின் அரசியல் வருகை தமிழக வாக்கு சதவீதத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் நடிப்பில் 'டிஎன் 2026' (TN 2026) என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் நட்டி நட்ராஜ், விஜய்யின் தோற்றத்தை நினைவூட்டும் வகையிலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், நட்டி நட்ராஜ் தனது எக்ஸ் (X) தளத்தில் அரசியல் ரீதியான முக்கியப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "நான் முழுமையாகத் தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிக்கிறேன். விஜய்தான் அடுத்த முதல்வர். நம்பிக்கையாக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். நட்டியின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இதற்கு பலத்த ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மற்ற கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, தனது படத்தின் விளம்பரத்திற்காகவே நட்டி இத்தகைய கருத்தைப் பதிவிடுவதாகச் சமூக ஊடகங்களில் ஒரு தரப்பினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory