» சினிமா » செய்திகள்
ரூ.2.52 கோடி செலுத்தத் தவறினால் 6 மாத சிறை: ரஜினி பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:31:33 PM (IST)
கோச்சடையான்’ திரைப்பட வெளியீட்டிற்காகப் பெறப்பட்ட ரூ.10 கோடி கடன் தொடர்பான காசோலை மோசடி வழக்கில், படத்தின் தயாரிப்பாளருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தக் கடனுக்காக வழங்கப்பட்ட காசோலை வங்கியில் போதிய பணம் இல்லாததால் திரும்பியதைத் தொடர்ந்து, கடன் வழங்கிய தரப்பு வழக்குத் தொடர்ந்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிமன்றம், தயாரிப்பாளர் ரூ.2.52 கோடியை நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தைச் செலுத்தத் தவறினால், தயாரிப்பாளருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சூர்யாவின் கருப்பு: தெலுங்கு டைட்டில் வெளியீடு!
சனி 4, ஏப்ரல் 2026 11:08:41 AM (IST)

கேரவனில் அத்துமீறியதாக நடிகை புகார்: மலையாள இயக்குநர் ரஞ்சித் கைது!
வியாழன் 2, ஏப்ரல் 2026 5:56:42 PM (IST)

பாலிவுட்டில் மீண்டும் நயன்தாரா: சல்மான் கானுடன் முதல்முறையாக ஜோடி சேர்கிறார்!
புதன் 1, ஏப்ரல் 2026 11:54:13 AM (IST)

புதிய படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
புதன் 1, ஏப்ரல் 2026 11:51:12 AM (IST)

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு திரைப்படம் ட்ராப்? சேயோன் முடிவால் திடீர் திருப்பம்!
சனி 28, மார்ச் 2026 10:51:11 AM (IST)

விஜய் - த்ரிஷா விவகாரம்: மனதில் பட்டதை பேசியதாக சமுத்திரக்கனி விளக்கம்!
புதன் 25, மார்ச் 2026 5:39:37 PM (IST)

