» சினிமா » செய்திகள்

கபாலி வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி லாபம்: பா.ரஞ்சித் பேச்சு!

திங்கள் 27, அக்டோபர் 2025 3:34:45 PM (IST)



கபாலி’ பட வெளியீட்டுக்கு முன்பே 100 கோடி லாபம் ஈட்டியதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘பைசன்’. இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் பா.ரஞ்சித்.

இந்த விழாவில் பா.ரஞ்சித் பேசும் போது, படக்குழுவினர் அனைவரையும் பாராட்டி பேசினார். பின்பு தன் மீதான விமர்சனங்களூக்கு பதிலளித்தார். அப்போது குறிப்பிடுகையில், "என் மீது விமர்சனங்கள் வரும்போது, ரஜினியை வைத்து எப்படி நீ இப்படி எடுக்கலாம்? அவரை எப்படி இந்த வசனத்தை பேச வைக்கலாம் என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். அந்த சமயத்தில் என்ன பண்ணுவதென்று தெரியவில்லை. ’மெட்ராஸ்’ படத்தை கொண்டாடியது மாதிரி ‘கபாலி’ படத்தையும் கொண்டாடுவார்கள் என நினைத்தேன். அப்படத்தின் வெற்றி என்ன என்பது தயாரிப்பாளர் தாணுவிற்கு தெரியும்.

பட வெளியீட்டுக்கு முன்பே ரூ.100 கோடி லாபம் ஈட்டிய படம் ‘கபாலி’. வணிக ரீதியாக வெற்றி பெற்ற படம். பல படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்று கொண்டாடப்பட்டுள்ளது. விமர்சன ரீதியாக கொண்டாடப்படவில்லை. படத்தின் திரைக்கதை குறைபாடுகளை மனரீதியாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், ரஜினியை எப்படி இந்த வசனத்தை பேச வைக்கலாம் என்ற கேள்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர் நடித்த இதர படங்கள் அனைத்துமே சூப்பரா என்று தெரியவில்லை. ‘கபாலி’ நல்ல படம், நன்றாக இயக்கியிருந்தேன் என்று ரஜினி சார் நம்பினார். அந்தப் படம் வெற்றி படம் என்று நம்பி மீண்டும் எனக்கு ‘காலா’ வாய்ப்பு கொடுத்தார்.

இந்த சமூகம் கடுமையாக விமர்சித்த பிறகும் அவரை வைத்து நான் ஏன் ‘காலா’ என்ற படத்தை இயக்கினேன் என பலரும் நினைக்கலாம். அந்தப் படத்தை பெரிய கமர்ஷியல் படமாக இயக்கி பணம் சம்பாதித்துவிட்டு போயிருக்கலாம். ஆனால், நிலமற்ற மக்களுக்கு நிலம் கோருதல் விஷயத்தை பேச முயற்சி செய்தேன்” என்று பேசினார் இயக்குநர் பா.ரஞ்சித்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்

வியாழன் 23, அக்டோபர் 2025 5:46:39 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory