» சினிமா » செய்திகள்
ஜன நாயகன் வெளியாகும் நாளே உண்மையான திருவிழா: விஜய்க்கு ஆதரவாக சிம்பு, ரவி மோகன்!
வியாழன் 8, ஜனவரி 2026 4:52:28 PM (IST)

ஜன நாயகன் வெளியாகும் அன்றே உண்மையான திருவிழா ஆரம்பமாகும் என்று விஜய்க்கு ஆதரவாக நடிகர் சிலம்பரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜன. 9 ஆம் திரைக்கு வர இருந்தது. ஆனால், இறுதி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைகாததால் படத்தின் வெளியீட்டுத் தேதியை ஒத்திவைப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
இதனால், விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜன நாயகன் பண்டிகை வெளியீட்டிலிருந்து விலகியது அவரின் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அன்புள்ள விஜய் அண்ணா, பின்னடைவுகள் எப்போதும் உங்களைத் தடுத்ததில்லை. இதைவிட பெரும் புயல்களைத் தாண்டி வந்துவிட்டீர்கள். இதுவும் கடந்து போகும். ஜன நாயகன் வெளியாகும் அன்றே உண்மையான திருவிழா ஆரம்பமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள பதிவில், "இதயம் நொறுங்கியது. விஜய்யண்ணா... உங்களின் லட்சக்கணக்கான சகோதரர்களில் ஒருவனாக நானும் துணை நிற்கிறேன். உங்களுக்கு எந்த தேதியும் தேவையில்லை. நீங்கள்தான் தொடக்கம். தேதி எதுவாக இருந்தாலும், படம் வெளியாகும் நாள்தான் பொங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.
தணிக்கை வாரியம் தொடர்பாக திரைத்துறையிலிருக்கும் பல பிரபலங்கள் மௌனம் காத்துவரும் சூழலில் ரவி மோகனின் இப்பதிவு விஜய் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தணிக்கை வாரியம் தொடர்பாக திரைத்துறையிலிருக்கும் பல பிரபலங்கள் மௌனம் காத்துவரும் சூழலில் ரவி மோகனின் இப்பதிவு விஜய் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜனநாயகன்' படக் கசிவு விவகாரம்: துணிக்கடை மேலாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
வெள்ளி 1, மே 2026 11:04:13 AM (IST)

100 மில்லியன் பார்வையாளர்கள்: யூடியூப்பில் கூலி படத்தின் பவர்ஹவுஸ் பாடல் புதிய சாதனை!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:05:45 PM (IST)

இறுதி கட்டத்தை எட்டிய ஜன நாயகன் சென்சார் பணிகள்: மே 8-ல் ரிலீஸ்? - ரசிகர்கள் உற்சாகம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:03:15 PM (IST)

சல்மான் கான் - நயன்தாரா கூட்டணியின் புதிய படம்: ஈகைத் திருநாளுக்கு வெளியீடு!
சனி 25, ஏப்ரல் 2026 11:55:40 AM (IST)

ஜனநாயகன் திரைப்படம் லீக் விவகாரம்: படத்தொகுப்பாளர் இடை நீக்கம்!
சனி 25, ஏப்ரல் 2026 11:09:09 AM (IST)

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? - கமல்ஹாசன் பதில்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:06:07 PM (IST)