» சினிமா » செய்திகள்

பொங்கல் ரேசில் களமிறங்கும் புதிய படங்கள்!

திங்கள் 12, ஜனவரி 2026 8:30:02 PM (IST)



பொங்கல் ரிலீசில் விஜயின் ஜனநாயகன் விலகியதால் வா வாத்தியார், சர்வர் சுந்தரம் உள்ளிட்ட பல புதிய படங்கள் ரிலீசாக உள்ளது. 

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் ‘ஜனநாயகன்' படம் ரிலீசாகவில்லை. கடும் இழுபறிக்கு பிறகு தான் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி' படம் ரிலீசுக்கு வந்தது. பொங்கலுக்கு முன்பாகவே ‘பராசக்தி' படம் ரிலீசாகிவிட்டதால், பொங்கல் பண்டிகையைக் குறிவைத்து சில படங்கள் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி ஜி.மோகன் இயக்கத்தில் ரிச்சர்டு ரிஷி நடித்த ‘திரவுபதி-2' படம் வருகிற 15-ந்தேதி ரிலீசாக இருக்கிறது. அதேபோல ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்' படமும் வருகிற 15-ந்தேதி பொங்கல் ரிலீசாக திரைக்கு வருகிறது. இதேபோல சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்' படமும் திரைக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான ‘வா வாத்தியார்' படம் வருகிற 14-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாங்கிய கடன் விவகாரத்தில் படத்தின் ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பிரச்சினை தீர்ந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடனை முழுமையாக செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory