» சினிமா » செய்திகள்
ஆயிரத்தில் ஒருவன் படத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி இல்லை: செல்வராகவன் ஆதங்கம்
சனி 25, அக்டோபர் 2025 3:48:52 PM (IST)

ஆயிரத்தில் ஒருவன் படத்தை இப்போது கொண்டாடுவதில் என்ன பயன் என்று படத்தின் இயக்குநர் செல்வராகவன் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "ஆயிரத்தில் ஒருவன் வெளியான போது, சிலர் செய்த எதிர்மறையான விமர்சனங்கள் வருத்தமாக இருந்தது. ஆனால், இப்போது அவர்களே கொண்டாடுகிறார்கள். ஆனால், இப்போது கொண்டாடுவதில் என்ன பயன்? நிறைய பணமும், நேரமும் அப்படத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
அப்படம் வெளியீட்டின் போது திரையரங்குகளில் கொண்டாடப்பட வேண்டும். அவர்கள் இப்போது கொண்டாடினாலும் எனக்கு அதில் மகிழ்ச்சியில்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ எழுதி வருவது குறித்தும் பேசியிருக்கிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. 2010-ம் ஆண்டு பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு தோல்வியை தழுவியது. இப்போது அதன் காட்சியமைப்புகள் உள்ளிட்டவற்றை இணையவாசிகள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
வியாழன் 23, அக்டோபர் 2025 5:46:39 PM (IST)

மனோரமா மகன் பூபதி மறைவு: இந்திய கம்யூனிஸ்ட் மு.வீரபாண்டியன் இரங்கல்!
வியாழன் 23, அக்டோபர் 2025 5:14:33 PM (IST)

உணர்வுப் பூர்வமான திரைப்படம் பைசன் : படக்குழுவுக்கு அண்ணாமலை பாராட்டு!
வியாழன் 23, அக்டோபர் 2025 4:34:52 PM (IST)

பைசன் படம் சூப்பர்... மாரி செல்வராஜை வாழ்த்திய ரஜினி!
புதன் 22, அக்டோபர் 2025 12:49:56 PM (IST)

இந்தி நகைச்சுவை நடிகர் அஸ்ரானி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
புதன் 22, அக்டோபர் 2025 11:38:44 AM (IST)

அருணாச்சலம் படத்துக்குப் பின் இணையும் ரஜினி - சுந்தர்.சி!
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:10:49 AM (IST)

