» சினிமா » செய்திகள்
என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது நாகரிகம் : வைரமுத்து ஆதங்கம்
திங்கள் 9, ஜூன் 2025 11:31:54 AM (IST)
தான் எழுதிய பாடல் பல்லவிகள் தன்னைக் கேட்காமல் திரைப்படத் தலைப்புகளாக வைக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா, ஈரமான ரோஜாவே, நிலாவத்தான் கையில புடிச்சேன்,
மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன்.
இப்படி இன்னும் பல… சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை காணும் இடங்களில் கேட்டதுமில்லை. செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன். ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது. ஆனால் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?” என எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நடிகை இலக்கியா தற்கொலை முயற்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை: திலீப் சுப்பராயன் விளக்கம்
சனி 26, ஜூலை 2025 4:00:13 PM (IST)

ஆக.2ல் ரஜினியின் கூலி இசை வெளியீட்டு விழா!
சனி 26, ஜூலை 2025 11:59:02 AM (IST)

பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு: சேரன் இயக்கத்தில் அய்யா!!
வெள்ளி 25, ஜூலை 2025 12:29:05 PM (IST)

இளையராஜா பாடல் காப்புரிமை விவகாரம்: சோனி நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
வியாழன் 24, ஜூலை 2025 3:42:42 PM (IST)

எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் : சாம் சி.எஸ் தகவல்!!
செவ்வாய் 22, ஜூலை 2025 4:45:26 PM (IST)

மீண்டும் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு: உறுதிபடுத்திய ஆதிக் ரவிச்சந்திரன்!
சனி 19, ஜூலை 2025 5:09:16 PM (IST)

naan thaanJun 18, 2025 - 02:06:41 PM | Posted IP 162.1*****