» சினிமா » செய்திகள்

லோகா படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சை வசனம்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

புதன் 3, செப்டம்பர் 2025 11:36:17 AM (IST)



கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள லோகா திரைப்படத்தில் கன்னடர்களைக் குறித்த சர்ச்சைக்குரிய வசனம் தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. 

மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா' திரைப்படம் மலையாளம் மட்டுமில்லாது தமிழ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை அதிகம் பார்த்திடாத கதைப் பின்னணியில் ‘சூப்பர் விமேன்' அதாவது, சக்திவாய்ந்த பெண்மணி கதாபாத்திரத்தை மையப்படுத்தி படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. இப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கதாபாத்திரமேற்றுள்ளார்.

இந்நிலையில், 'லோகா' திரைப்படத்தில் கன்னடர்களைக் குறித்து இடம்பெற்றுள்ள வசனம் சர்ச்சைக்குரியதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, படத்தை தயாரித்துள்ள நடிகர் துல்கர் சல்மானின் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’மேற்கண்ட விவகாரத்தில், கர்நாடக மக்களின் உணர்வுகள் புண்பட்டிருப்பதாக தாங்கள் அறிந்து கொண்டதாகவும், இதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும்’ தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்படும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory