» சினிமா » செய்திகள்
பழநி கோயிலில் சூர்யா 46 படக்குழுவினர் சுவாமி தரிசனம்
வியாழன் 5, ஜூன் 2025 3:38:36 PM (IST)

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் சூர்யா, இயக்குநர் வெங்கி அட்லூரி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படத்தை, ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க உள்ளார். இந்நிலையில் இன்று காலை நடிகர் சூர்யாவும், இயக்குநர் வெங்கி அட்லூரியும் பழநி முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர்.
அவர்கள் பழநி அடிவாரத்தில் இருந்து ரோப் காரில் மலைக்கோயிலுக்கு வந்தனர். அவர்களை கோயில் அதிகாரிகள் வரவேற்றனர். சிறுகால சந்தி பூஜையில் கலந்து கொண்டு, 46-வது படக்கதையை முருகன் பாதத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து, வேடன் அலங்காரத்தில் தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முருகன் படம், பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, கோயில் உட்பிரகாரத்தில் உள்ள ஆனந்த விநாயகர், போகர் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட்டனர். கோயிலுக்கு வந்த பக்தர்கள் நடிகர் சூர்யாவுடன் கைக்குலுக்கி, புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர், படக்குழுவினர் ரோப் கார் மூலம் அடிவாரத்துக்கு சென்று அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிவகார்த்திகேயனின் பராசக்தி பொங்கல் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சனி 13, செப்டம்பர் 2025 10:51:37 AM (IST)

லோகா திரைப்படத்தின் வெற்றி எதிரொலி : காந்தா ரிலீஸ் தேதி மாற்றம்!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:32:03 PM (IST)

விக்ரம் படம் டிராப்... ஃபகத் பாசிலை இயக்கும் மெய்யழகன் இயக்குநர் பிரேம் குமார்!
புதன் 10, செப்டம்பர் 2025 12:37:31 PM (IST)

பொங்கல் ரிலீஸ் பந்தயத்தில் விஜய் உடன் மோதும் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள்!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 4:08:06 PM (IST)

46 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி -கமல்!!
திங்கள் 8, செப்டம்பர் 2025 3:52:59 PM (IST)

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் சிஇஓ ஆனார் இன்பன் உதயநிதி!
வியாழன் 4, செப்டம்பர் 2025 12:47:54 PM (IST)
