» சினிமா » செய்திகள்

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி விஜய் : நடிகர் பார்த்திபன் கருத்து!

புதன் 27, நவம்பர் 2024 11:05:52 AM (IST)

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக நடிகர் விஜய்யின் த.வெ.க. உள்ளது என நடிகர் பார்த்திபன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கொரோனா காலத்தில் படப்பிடிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டது. படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என நடிகர்கள் பார்த்திபன், விஜய்சேதுபதி, பாக்யராஜ் உள்ளிட்ட திரை துறையினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட படப்பிடிப்பு கட்டணம் ரூ. 28 ஆயிரத்தில் இருந்து ரூ. 15 ஆயிரமாகவும், தொலைகாட்சி சீரியலுக்கு ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டது. இதற்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சட்டமன்றத்தில் நடிகர் பார்த்திபன் சந்தித்து பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து புதுச்சேரி சுற்றுலா மேம்பாடு குறித்த படத்தை புதுச்சேரி அரசு தயாரித்தால் தான் இயக்கித் தர தயார் எனவும் முதலமைச்சர் ரங்கசாமியிடம் நடிகர் பார்த்திபன் கூறினார்.

பின்னர் நடிகர் பார்த்திபன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசும் கட்டண குறைப்பை அமல்படுத்த வேண்டும். நல்ல திரைப்படத்தை மோசமான விமர்சனத்தால் தோல்வியடைய வைப்பது சரியல்ல. நடிகர் தனுஷ், நயன்தாரா மோதலை பார்வையாளனாகவே பார்த்து ரசிக்கிறேன்.

பெண்களுக்கு முன்பை விட திரைதுறையில் அதிக பாதுகாப்பு உள்ளது. தமிழ், மலையாள நடிகைகளுக்கும் பாதுகாப்பு உள்ளது.தமிழ் திரைப்பட கலைஞர்களிடையே விவாகரத்து அதிகரித்திருப்பது கவலைக்குரியது. ஏ.ஆர்.ரகுமானுக்கு இசையை தவிர ஏதும் தெரியாது. நல்ல மனிதர் என அவர் மனைவி தந்த சான்றிதழை வேறு யாரும் தரமுடியாது.

குடும்பம் என்று இருந்தால் சென்சிடிவ் இருக்கும். அதை பெரிது படுத்தியிருக்கக்கூடாது.தமிழகத்தில் அரசியலில் சுவாராஸ்யமான பேச்சின் மூலமே பதவிக்கு வந்துள்ளனர். நடிகர் விஜய், சீமான் ஆகியோர் பேச்சு வெவ்வேறு வகையில் பாராட்டத்தக்கவை.

தி.மு.க. பற்றி விஜய் பேசுவது தவறில்லை. தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை விமர்சித்து விஜய் பேசுவது தவறானதல்ல. விஜய்க்கு தி.மு.க. மீது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இருக்காது என நினைக்கிறேன்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆளும் கட்சியை எதிர்த்தே அரசியல் நடத்தினார். ஆளும் கட்சியை எதிர்த்தால்தான் ஹீரோவாக முடியும். தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக த.வெ.க. உள்ளது. அரசியலில் ஆர்வமுண்டு, யாரையும் சார்ந்து இருக்க மாட்டேன். எனக்கும் அரசியல் கட்சி தொடங்க ஆசையிருப்பதால், வரும் தேர்தலுக்கு விஜய் கட்சி தொடங்கியதால் எதிர்காலத்தில் கட்சி தொடங்குவேன். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory