» சினிமா » செய்திகள்

ஜன​நாயகன் படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்​கள் : சிவகார்த்திகேயன் பேச்சு

திங்கள் 5, ஜனவரி 2026 4:21:40 PM (IST)



ஜனவரி 9-ம் தேதி வெளி​யாகும் ‘ஜன​நாயகன்’ படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்​கள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார். 

சு​தா கொங்​கரா இயக்​கத்​தில் சிவ​கார்த்​தி​கேயன் ஹீரோ​வாக நடித்​துள்ள படம், ‘பராசக்​தி’. ரவி மோகன், அதர்​வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்​துள்​ளார். டான் பிக்​சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்​கரன் தயாரித்​துள்ள இப்​படம் பொங்​கலை முன்​னிட்டு ஜன.10-ல் வெளி​யாகிது. இதன் பாடல் வெளி​யீட்டு விழா தனி​யார் கல்​லூரி ஒன்​றில் நடந்​தது. படக்​குழு​வினர் கலந்துகொண்​டனர்.

விழா​வில் சிவ​கார்த்​தி​கேயன் பேசும்​போது, "பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்​டது. அந்த பெயருக்கு ஏற்​றபடி, இந்​தப் படமும் அதே அளவு தாக்​கத்தை ஏற்​படுத்​தும். 1960-களுக்கு டைம் டிராவல் செய்து பார்வையாளர்​களை அழைத்​துச் செல்​லும் படம் இது. மாணவர்​கள் எப்​போதுமே சக்​தி​ வாய்ந்​தவர்​கள். அவர்கள் எந்த அளவுக்கு வலிமை கொண்​ட​வர்​களாக இருந்தார்கள் என்​பதை இந்​தப் படம் அழுத்​த​மாக காட்​டு​கிறது.

படத்​தின் உள்​ளடக்​கம் குறித்து பல கருத்​துகள் வெளிவரு​கின்​றன. ஆனால் பலரின் தியாகங்​களை நாம் நேர்​மறை​யாக​வும் மரியாதை​யுட​னும் பதிவு செய்​திருக்கிறோம். இதில் ரவிமோகன் சார், பவர்​புல் வில்​லன் கதா​பாத்​திரத்​தில் வரு​கிறார். ஜனவரி 9-ம் தேதி வெளி​யாகும் ‘ஜன​நாயகன்’ படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்​கள். 33 வருடம் திரைத்​ துறை​யில் மகிழ்​வித்​தவர். கடைசி படம் என்று சொல்லி இருக்​கிறார். ஆகவே ஜனவரி 9ம் தேதி அதை கொண்​டாட வேண்​டும். அடுத்த நாள் ஜனவரி 10ம் தேதி ‘பராசக்​தி’ படத்​துக்​கு வாருங்​கள்​” என்​றார்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory