» சினிமா » செய்திகள்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா!

திங்கள் 14, அக்டோபர் 2024 8:56:05 PM (IST)



ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45-வது படத்தின் குறித்த அதிகராப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை முடித்தபிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணைகிறாரா இல்லை சுதா கொங்காராவுடனான பேச்சுவார்த்தை துவங்குமா என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முற்றிலும் எதிர்பாராத வகையில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நாயகனாக நடிக்கும் அவரது 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாகவும் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகராக மட்டும் அறியப்பட்ட ஆர். ஜே. பாலாஜி, சூர்யாவை இயக்கவுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

46 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் ரஜினி -கமல்!!

திங்கள் 8, செப்டம்பர் 2025 3:52:59 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory