» சினிமா » செய்திகள்

பிக் பாஸ் 8 அக்டோபர் 6ல் தொடங்கும் : விஜய் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

செவ்வாய் 24, செப்டம்பர் 2024 12:18:34 PM (IST)



பிக் பாஸ் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக விஜய் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஏராளமான ரசிகர்கள் பார்க்கின்றனர். கடந்த 7 சீசன்களாக இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன் பிக் பாஸ் - 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என அவர் அறிவித்ததைத் தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டது.

சில நாள்களுக்கு முன்பு, இதுவரை எந்த சீசன்களில் இல்லாத வகையில் பிக் பாஸ் - 8 நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சியை(ப்ரோமோ) மக்கள் மத்தியில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், பிக் பாஸ் - 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக தொலைக்காட்சி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போட்டியாளர்கள் வெளிஉலக தொடர்பு இல்லாமல் 100 நாள்களுக்கு உள்ளே தங்கியிருந்து, அவர்களின் தனிப்பட்ட குணங்களை வெளிப்படுத்துவதுதான் இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாகும்.இந்த புதிய சீசனில் பங்கேற்கவுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல் இணையத்திலும் பரவி வருகிறது.

பாரதி கண்ணம்மா தொடர் மூலம் பிரபலமான நடிகர் அருண், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ், மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சஞ்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும், பிக் பாஸ் - 8 நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்ச்சியின் அக்டோபர் 6 ஆம் தேதியே அதிகாரப்பூர்வ தகவல் தெரியவரும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory