» சினிமா » செய்திகள்
திரைப்பட தயாரிப்பாளர் டில்லி பாபு டில்லி பாபு காலமானார்
திங்கள் 9, செப்டம்பர் 2024 12:44:31 PM (IST)
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டில்லி பாபு தனது 50-வது வயதில் இன்று காலை காலமானார்.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் டில்லி பாபு. இவர் கடந்த 2015-ன் ஆண்டு வெளியான உறுமீன் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சுலர் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.இந்நிலையில், தயாரிப்பாளர் டில்லி பாபு தனது 50-வது வயதில் இன்று காலை காலமானார். இவரது இந்த திடீர் மரணம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவரது ரசிகர்கள், நடிகர், நடிகைகள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டில்லி பாபுவின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாலிவுட்டில் மீண்டும் நயன்தாரா: சல்மான் கானுடன் முதல்முறையாக ஜோடி சேர்கிறார்!
புதன் 1, ஏப்ரல் 2026 11:54:13 AM (IST)

புதிய படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!
புதன் 1, ஏப்ரல் 2026 11:51:12 AM (IST)

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு திரைப்படம் ட்ராப்? சேயோன் முடிவால் திடீர் திருப்பம்!
சனி 28, மார்ச் 2026 10:51:11 AM (IST)

விஜய் - த்ரிஷா விவகாரம்: மனதில் பட்டதை பேசியதாக சமுத்திரக்கனி விளக்கம்!
புதன் 25, மார்ச் 2026 5:39:37 PM (IST)

நீங்கள் தான் எங்களின் அளவுகோல்: ரஜினியின் பாராட்டுக்கு துரந்தர் 2 இயக்குநர் நெகிழ்ச்சி!
செவ்வாய் 24, மார்ச் 2026 11:20:34 AM (IST)

அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடி வாங்குறவனாவது சொல்லணும்! - ஜனநாயகன் குறித்து அமீர் கருத்து!
வெள்ளி 20, மார்ச் 2026 4:54:34 PM (IST)

