» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கொல்கத்தாவை கதறவிட்ட முகுல் சவுத்ரி: 7 சிக்ஸர்கள் விளாசிய தோனி ரசிகர்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:29:44 PM (IST)

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் முகுல் சவுத்ரி அதிரடி காட்டி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
104 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி தடுமாறிய போது களமிறங்கிய இவர், இக்கட்டான சூழலில் அபாரமாக விளையாடி வெற்றியைத் தேடித்தந்தார். இந்த ஆட்டத்தில் வெறும் 27 பந்துகளில் 54 ரன்களை விளாசிய முகுல் சவுத்ரி, ஐபிஎல் மினி ஏலத்தில் 2.6 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டவர்.
21 வயதான இவர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தீவிர ரசிகர் ஆவார். தோனியைப் போலவே இவரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகுல், உள்ளூர் கிரிக்கெட்டில் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் மிதவேகப் பந்துவீச்சாளராகத் தனது பயணத்தைத் தொடங்கியவர், பின்னர் தனது அதிரடி பேட்டிங் பாணியால் கவனம் பெற்றார்.
2025-26 சையது முஷ்டாக் அலி தொடரில், காயம் காரணமாக விலகிய கார்த்திக் சர்மாவுக்குப் பதிலாக வாய்ப்பு பெற்ற முகுல், 5 இன்னிங்ஸ்களில் 173 ரன்களைக் குவித்தார். இதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 198.55 ஆக இருந்தது. தோனியைத் தனது முன்மாதிரியாகக் கொண்ட இவர், மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிக்ஸர்களைப் பறக்கவிடும் திறன் கொண்டவர்.
பரபரப்பான வெற்றி: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், ஒரு கட்டத்தில் லக்னோ அணி 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. கடைசி 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆவேஷ் கானுடன் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தார். இதில் முகுலின் பங்களிப்பு மட்டுமே 52 ரன்கள்.
இந்த இன்னிங்ஸில் மொத்தம் 7 சிக்ஸர்களை விளாசிய அவர், கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட போது, இரண்டு இமாலய சிக்ஸர்களை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
"தந்தையின் கனவு" - முகுல் சவுத்ரி உருக்கம்: ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு முகுல் சவுத்ரி பேசியதாவது: "எனது தந்தை நான் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். குடும்பச் சூழல் காரணமாக 12 வயதிற்கு மேல்தான் எனது முறையான பயிற்சியைத் தொடங்க முடிந்தது. ராஜஸ்தானின் சிகர் பகுதியில் தொடங்கி, பின்னர் ஜெய்ப்பூர் மற்றும் குருகிராமில் நவீன டி20 ஆட்டத்திற்கு ஏற்ப என்னை மாற்றிக்கொண்டேன்.
எனக்கான வாய்ப்பில் முழு கவனத்தையும் செலுத்தி, கடைசி வரை களத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். எனது சோனில் (Zone) பந்து வரும்போது அதை விளாசத் தயங்கியதில்லை. இந்த இன்னிங்ஸ் எனக்கு அதிக தன்னம்பிக்கையைக் கொடுத்துள்ளது."
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொல்கத்தாவை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!
புதன் 15, ஏப்ரல் 2026 12:02:33 PM (IST)

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள்: அறிமுகப் போட்டியிலேயே வரலாறு படைத்த பிரஃபுல் ஹிங்கே!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 5:25:17 PM (IST)

ஐபிஎல் 2026: அதிரடி ஆட்டத்தில் தடுமாறும் மும்பை - டாடீஸ் ஆர்மி உத்தி தோல்வியா?
திங்கள் 13, ஏப்ரல் 2026 4:58:37 PM (IST)

முடிவுக்கு வந்த தோல்விப் பயணம்: டெல்லியை வீழ்த்தி சிஎஸ்கே முதல் வெற்றி!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 10:43:14 AM (IST)

வைபவ் - ஜூரல் அதிரடி பேட்டிங்: ஆர்.சி.பி. அணியை வீழத்தி ராஜஸ்தான் 4-வது தொடர் வெற்றி!
சனி 11, ஏப்ரல் 2026 11:10:54 AM (IST)

கடைசி பந்தில் நழுவிய வெற்றி: உடைந்த மில்லர்; தேற்றிய அக்ஷர்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 10:12:28 AM (IST)

