» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐபிஎல் கிரிக்கெட்டில் விரைவாக 5ஆயிரம் ரன்கள் : கே.எல்.ராகுல் புதிய சாதனை
புதன் 23, ஏப்ரல் 2025 12:53:14 PM (IST)

ஐபிஎல் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 5,000+ ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார்.
நடப்பு சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ராகுல் விளையாடி வருகிறார். தனது 130-வது ஐபிஎல் இன்னிங்ஸில் 5,000+ ரன்களை அவர் எட்டினார். இதற்கு முன்பு 135 ஐபிஎல் இன்னிங்ஸில் 5,000+ ரன்களை எட்டியிருந்தார் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். தற்போது வார்னர் சாதனையை ராகுல் முந்தியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000+ ரன்களை கடந்த 8-வது பேட்ஸ்மேனாக ராகுல் அறியப்படுகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் 8,326 ரன்களுடன் கோலி முதலிடத்தில் உள்ளார்.
லக்னோ உடனான ஆட்டத்தில் 42 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார் ராகுல். இதுவரை ஹைதராபாத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளில் ராகுல் விளையாடி உள்ளார். தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டு சீசன் முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விளையாடி வருகிறார். 130 இன்னிங்ஸில் விளையாடி 5,006 ரன்கள் எடுத்துள்ளார். 40 அரை சதம், 4 சதம் விளாசி உள்ளார். பேட்டிங் சராசரி 46.35. ஸ்ட்ரைக் ரேட் 135. 425 ஃபோர்கள், 203 சிக்ஸர்கள் விளாசி உள்ளார்.
குறைந்த இன்னிங்ஸில் 5,000 ரன்கள் எட்டிய பேட்ஸ்மேன்கள் @ ஐபிஎல்
கே.எல்.ராகுல் - 130 இன்னிங்ஸ்
டேவிட் வார்னர் - 135 இன்னிங்ஸ்
விராட் கோலி - 157 இன்னிங்ஸ்
ஏபி டிவில்லியர்ஸ் - 161 இன்னிங்ஸ்
ஷிகர் தவாண் - 168 இன்னிங்ஸ்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மார்ஷ் அதிரடி சதம்: குஜராத்தை வீழ்த்தி லக்னோ ஆறுதல் வெற்றி!
வெள்ளி 23, மே 2025 12:49:33 PM (IST)

கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கிப் போட்டி தொடக்கம்: முதல் ஆட்டத்தில் பிஎன்பி அணி வெற்றி
வெள்ளி 23, மே 2025 11:12:51 AM (IST)

டெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது மும்பை!
வியாழன் 22, மே 2025 11:21:09 AM (IST)

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: சென்னையை வென்றது ராஜஸ்தான்
புதன் 21, மே 2025 10:46:30 AM (IST)

சாய் சுதர்சன் - ஷுப்மன் கில் அதிரடி : பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் தகுதி!!
திங்கள் 19, மே 2025 10:47:13 AM (IST)

டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டி: நீரஜ் சோப்ரா சாதனை!
ஞாயிறு 18, மே 2025 11:15:30 AM (IST)
