» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மார்ஷ் அதிரடி சதம்: குஜராத்தை வீழ்த்தி லக்னோ ஆறுதல் வெற்றி!
வெள்ளி 23, மே 2025 12:49:33 PM (IST)

ஐபிஎல் தொடரின் 64வது லீக் போட்டியில் 33 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி லக்னோ ஆறுதல் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 64வது லீக் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது. இதில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் பவுலிங் செய்தது. லக்னோ அணியில் துவக்க வீரர்களாக களமிறங்கிய மார்க்ராம், மிட்செல் மார்ஷ் ஜோடி அதிரடியாக விளையாடியது. மார்க்ராம் 36 ரன் (24 பந்து) எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்த நிக்கோலஸ் பூரன் 23 பந்தில் அரை சதம் அடித்தார். மறுமுனையில் 56 பந்தில் சதம் அடித்து அதிரடியாக விளையாடிய மார்ஷ் 117 ரன் (64 பந்து, 10 பவுண்டரி, 8 சிக்சர்) அடித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது. பூரன் 56 ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் பண்ட் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அடுத்து களமிறங்கிய குஜராத் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக ஷாருக்கான் 57 ரன் (29 பந்து) எடுத்தார். ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த லக்னோ 33 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கிப் போட்டி தொடக்கம்: முதல் ஆட்டத்தில் பிஎன்பி அணி வெற்றி
வெள்ளி 23, மே 2025 11:12:51 AM (IST)

டெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது மும்பை!
வியாழன் 22, மே 2025 11:21:09 AM (IST)

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: சென்னையை வென்றது ராஜஸ்தான்
புதன் 21, மே 2025 10:46:30 AM (IST)

சாய் சுதர்சன் - ஷுப்மன் கில் அதிரடி : பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் தகுதி!!
திங்கள் 19, மே 2025 10:47:13 AM (IST)

டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டி: நீரஜ் சோப்ரா சாதனை!
ஞாயிறு 18, மே 2025 11:15:30 AM (IST)

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17ல் மீண்டும் தொடக்கம் : அட்டவணை வெளியீடு!
செவ்வாய் 13, மே 2025 12:45:07 PM (IST)
