» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு: இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அறிவிப்பு!

வியாழன் 4, செப்டம்பர் 2025 5:17:13 PM (IST)



கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அறிவித்துள்ளார். 

இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் அமித் மிஸ்ரா விளையாடியுள்ளார். எனது கிரிக்கெட் வாழ்க்கையின் 25 ஆண்டுகள் மறக்கமுடியாதவை என்றும் அமித் மிஸ்ரா உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்திய அணிக்காக 22 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் (76 விக்கெட்டுகள்), 36 ஒருநாள் போட்டிகள்(64 விக்கெட்டுகள்) மற்றும் 10 டி20 போட்டிகளில் (16 விக்கெட்டுகள்) அமித் மிஸ்ரா விளையாடியுள்ளார். 

2003 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் முத்தரப்பு தொடரில் அறிமுகமான அமித் மிஸ்ரா, அதன்பின்னர்., 2008 ஆம் ஆண்டில் பஞ்சாபின் மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார்.

அதன் தொடர்ச்சியாக, 2013 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னாள் வீரர் ஜகவல் ஸ்ரீநாத்தின் சாதனையை சமன் செய்தார். 2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடிய மிஸ்ரா, 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து ஜொலித்துக் கொண்டிருந்த அமித் மிஸ்ரா, இந்திய அணிக்காக கடைசியாக 2017 ஆம் ஆண்டு விளையாடியிருந்தார்.

ஹரியாணாவைச் சேர்ந்தவரான மிஸ்ரா, ஐபிஎல் போட்டிகளில் தில்லி(2008), பஞ்சாப்(2011), ஹைதராபாத்(2013), லக்னௌ(2024) ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 162 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 174 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும், இவர் 3 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஐபிஎல்லில் கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணிக்காக விளையாடி ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory