» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கிப் போட்டி தொடக்கம்: முதல் ஆட்டத்தில் பிஎன்பி அணி வெற்றி

வெள்ளி 23, மே 2025 11:12:51 AM (IST)



கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் நேற்று தொடங்கியது.முதல் ஆட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றி பெற்றது.

கோவில்பட்டியில் கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் இலட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை பதின்நான்காவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் மே 23ம் தேதி முதல் ஜூன் 01ம் தேதி வரை கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெறுகிறது. 

மே 23ம் தேதி நடந்த துவக்க விழாவிற்கு முன்னாள் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் சி.ஆர்.குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். முதல் லீக் போட்டியில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், சென்னை இன்கம் டேக்ஸ் ஹாக்கி அணியும் மோதின.  இதில் 2:0 என்ற கோல் கணக்கில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வெற்றிப் பெற்றது. 42-வது நிமிடத்தில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர் விஷால் அன்டில் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார். 

60-வது நிமிடத்தில் நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர் மந்தீப் மோர் பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். சுரேஷ் குமார் மற்றும் ராஜீவ் ராத்தன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது நியூடெல்லி பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர் விஷால் அன்டில்-க்கு வழங்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory