» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சாய் சுதர்சன், பிரசித் கிருஷ்ணா அபாரம்: ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது குஜராத்!
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:25:52 PM (IST)

சாய் சுதர்சன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜின் ஆபார ஆட்டத்தினால் ராஜஸ்தானை வீழ்த்தி 4-வது வெற்றியை ஈட்டி 8 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது.
217 ரன்களுக்கு எதிராக ராஜஸ்தான் சரியாகத் தொடங்கவில்லை. ஜெய்ஸ்வால் அவசரக்குடுக்கைத் தனமாக அர்ஷத்தின் பந்தை ஸ்லாஷ் செய்து டீப் தேர்ட்மேனில் கேட்ச் ஆனார். நிதிஷ் ராணாவும் அவ்வகையிலேயே அவுட் ஆனார், ஆனால் பவுலர் இந்த முறை சிராஜ். உடனேயே சஞ்சுவும் ரியான் பராகும் எதிர்த்தாக்குதல் இன்னிங்சை ஆடி 48 ரன்களை விரைவில் எடுத்தனர். பராக் 26 ரன்களில் கேஜ்ரோலியாவிடம் வெளியேறினார்.
ரஷீத் கான் இந்தப் போட்டிக்கு முன்னால் 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியிருந்தார், ஆனால் நேற்று முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தினார். அதுவும் ஷார்ட் பிட்ச் பந்துதான் துருவ் ஜுரல் வாரிக்கொண்டு அடிக்கப் போய் டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனார். ஹெட்மையரை முதல் பந்திலேயே எல்பியில் வெளியேற்றியிருப்பார் ரஷீத் கான் ஆனால் பந்து சற்றே லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆனது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய ஹெட்மையர் ரஷித் கானை வாங்கி விட்டார் வாங்கி... 12 பந்துகளில் 26 ரன்களை விளாசினார். இதில் 2 நான்குகள் மற்றும் 2 சிக்சர்கள். இம்பாக்ட் வீரர் ஷுபம் துபேயையும் ரஷீத் கான் வீழ்த்தினார்.
பிரசித் கிருஷ்ணா குஜராத் டைட்டன்ஸின் ஒரு சக்தியாகத் திகழ்கிறார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக அந்த அணி இவரது பந்தின் பவுன்சை எதிர்கொள்ள முடியாது திணறி 2 விக்கெட்டுகளைக் கொடுத்தனர், அன்று 4 ஓவர் 18 ரன் 2 விக்கெட். நேற்று பிரசித் 4 ஓவர் 24 ரன்கள் மூன்று விக்கெட். நேற்றும் பந்து எகிறியது, குட் லெந்திலிருந்து எகிறுகிறது.
மிடில் ஓவர் தாதாவாக மாறி வருகிறார் பிரசித் கிருஷ்ணா, அனைத்திற்கும் மேலாக இங்கிலாந்து தொடரில் பிரசித் கிருஷ்ணா லெவனில் இடம்பெற பெரும் தகுதியுடையவராக இருக்கிறார், ஷமிக்குப் பதில் பிரசித் முன்னோக்கப்படுவார் என்றே தெரிகிறது.
பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சைப் பார்க்கும் போது பாகிஸ்தானின் முகமது ஆசிப் போல் உள்ளது, ஆசிப் பவுன்ஸ்டுடன் பந்தை ஸ்விங் செய்வதிலும் பழைய பந்தில் கட்டர்ஸ் வீசுவதிலும் பந்தை தோள்பட்டைக்கு மேல் உடல் நோக்கி வீசி பெரிய பெரிய பேட்டர்களை திணறடித்தவர். பிரசித் கிருஷ்ணாவின் ஆக்ஷன் ஆக்ரோஷம் அனைத்திற்கும் மேலாக பொறுமை, வேகத்துடன் விவேகமும் அவரை ஆசிப் ரக பவுலராகவே நம்மை ஒப்பிட வைக்கிறது. இதே ஃபார்மை அவர் தொடர் முயற்சியாக இங்கிலாந்துக்குக் கொண்டு சென்றால் இங்கிலாந்து அணியின் பாஸ்பால் ஆட்டம் இன்னொரு பின்னடைவைச் சந்திக்கும் என்பது உறுதி.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மார்ஷ் அதிரடி சதம்: குஜராத்தை வீழ்த்தி லக்னோ ஆறுதல் வெற்றி!
வெள்ளி 23, மே 2025 12:49:33 PM (IST)

கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கிப் போட்டி தொடக்கம்: முதல் ஆட்டத்தில் பிஎன்பி அணி வெற்றி
வெள்ளி 23, மே 2025 11:12:51 AM (IST)

டெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது மும்பை!
வியாழன் 22, மே 2025 11:21:09 AM (IST)

வைபவ் சூா்யவன்ஷி அதிரடி: சென்னையை வென்றது ராஜஸ்தான்
புதன் 21, மே 2025 10:46:30 AM (IST)

சாய் சுதர்சன் - ஷுப்மன் கில் அதிரடி : பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் தகுதி!!
திங்கள் 19, மே 2025 10:47:13 AM (IST)

டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டி: நீரஜ் சோப்ரா சாதனை!
ஞாயிறு 18, மே 2025 11:15:30 AM (IST)
