» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 275 ரன்கள் இலக்கு!

புதன் 18, டிசம்பர் 2024 10:03:29 AM (IST)



பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 213 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்த நிலையில், கடைசி ஜோடியான ஆகாஷ் தீப் பும்ராவுடன் சேர்ந்து பாலோ ஆனை தவிர்த்தனர். 252/9 ரன்களுக்கு 4ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

அதன்பின்னர் இன்று(டிச.18) ஆட்டம் தொடங்கியதும் 4 ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. டிராவிஸ் ஹெட்டின் பந்துவீச்சில் ஆகாஷ் தீப் 31 ரன்களில்ல் ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 78.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

2-வது இன்னிங்ஸில் 185 ரன்கள் முன்னிலையுடன் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பும்ரா - ஆகாஷ் தீப் இருவரும் பந்துவீச்சிலும் நெருக்கடி கொடுத்தனர். பும்ரா - ஆகாஷ் தீப் வேகத்தில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 11 ஓவர்களில் 33 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் 8-வது விக்கெட்டுக்கு வந்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் தெரிக்கவிட்டு அணியின் ஸ்கோரை கொஞ்சம் உயர்த்தினார். ஆஸ்திரேலிய அணி முடிவில் 18 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்திருந்த போது கேப்டன் கம்மின்ஸ் டிக்ளேர் செய்தார்.

அதிகபட்சமாக கம்மின்ஸ் 22 ரன்களும், அலெக்ஸ் 20 ரன்களும் எடுத்தனர். இந்திய அணித் தரப்பில், பும்ரா 3 விக்கெட்டுகளும், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனால், இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory