» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பிரிஸ்பேன் டெஸ்ட் டிரா: சாம்பியன்ஷிப் பட்டியலில் மாற்றம்!

புதன் 18, டிசம்பர் 2024 3:50:29 PM (IST)

பிரிஸ்பேன் டெஸ்ட் டிராவில் முடிந்ததால் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளின் வெற்றி சதவீதம் குறைந்துள்ளது. 

பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (63.33 சதவீதம்) முதல் இடத்தில் நீடிக்கிறது.

பிரிஸ்பேன் டெஸ்ட் டிராவில் முடிந்ததால் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளின் வெற்றி சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆட்டத்திற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் வெற்றி சதவீதம் 60.71 ஆகவும், இந்தியாவின் வெற்றி சதவீதம் 57.29 ஆகவும் இருந்தது. இது தற்போது 58.89 சதவீதம் (ஆஸ்திரேலியா), 55.88 சதவீதம் (இந்தியா) குறைந்துள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் ஆஸ்திரேலியா 2ம் இடத்திலும், இந்தியா 3ம் இடத்திலும் உள்ளன. 4வது இடத்தில் நியூசிலாந்தும் (48.21 சதவீதம்), 5ம் இடத்தில் இலங்கை (45.45 சதவீதம்) அணியும் உள்ளன. 6 முதல் 7 இடங்களில் முறையே இங்கிலாந்து (43.18 சதவீதம்), பாகிஸ்தான் (33.33 சதவீதம்), வங்காளதேசம் (31.25 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (24.24 சதவீதம்) அணிகள் உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory