» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சர்வதேச டி20 போட்டியில் அதிக அரைசதம் : ஸ்மிருதி மந்தனா சாதனை

சனி 21, டிசம்பர் 2024 10:51:31 AM (IST)

சர்வதேச டி20 போட்டியில் அதிக அரைசதம் அடித்து இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கணை மந்தனா சாதனை படைத்தார். 

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா பல்வேறு சாதனைகளை தகர்த்துள்ளார். 3வது போட்டியில் 77 ரன் குவித்த மந்தனா, டி20 போட்டிகளில் 50 பிளஸ் ரன்களாக 30வது முறை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

அவர், நியூசிலாந்து அணியை சேர்ந்த சுஸீ பேட்சின் 29 முறை 50 பிளஸ் சாதனையை தகர்த்துள்ளார். சுஸீ பேட்சின் அதிகபட்ச பவுண்டரி சாதனையையும் மந்தனா 506 பவுண்டரிகளுடன் முறியடித்துள்ளார். ஒரு தொடரில் அதிக ரன் குவித்த சாதனையை, இந்தியாவின் மித்தாலி ராஜ் 192 ரன்களுடன் நிகழ்த்தி இருந்தார். அந்த சாதனையையும், 193 ரன் குவித்து அவர் முறியடித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory