» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படும்: உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன்

வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:10:55 AM (IST)



தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வுக்கு ஈரான் போர், பெட்ரோல் - டீசல் விலையும் காரணம் என உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வு குறித்து அமைச்சர் வெங்கடரமணன் பேசியதாவது, "ஈரான் போர், பெட்ரோல் - டீசல் விலையால்தான் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. சர்க்கரையின் விலையானது, தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. அதிகம் உற்பத்தி செய்யப்படும் மகாராஷ்டிரத்திலும் சர்க்கரையின் விலை உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் அரிசி, சர்க்கரை, வெங்காயம், உருளைக் கிழங்கு உள்ளிட்ட 41 பொருள்களின் விலையை நாள்தோறும் கண்காணித்து வருகிறோம். மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் சென்றடைவதையும் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதிலும் பெரும் முனைப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விலை கண்காணிப்பு கமிட்டியில், வாராவாரம் எந்தெந்த பொருள்களின் விலை அதிகமாக உள்ளது, அவற்றை எப்படி கட்டுப்படுத்தலாம், பண்டிகை காரணங்களால் விலை உயர்வா, ஈரான் போர்தான் காரணமா, விளைச்சல் குறைவால்தான் காரணமா என அனைத்து கோணங்களிலும் கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்தார். அறியலாம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory