» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கடல் அலங்கார மீன்கள் இனப்பெருக்கம், வளர்ப்பு: ஐசிஏஆர்-சிஎம்எப்ஆர்ஐ சார்பி் 5 நாள் பயிற்சி நிறைவு!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:44:50 AM (IST)

ஐசிஏஆர்-சிஎம்எப்ஆர்ஐ மையங்கள் சார்பில் "உயர் மதிப்புமிக்க கடல் அலங்கார மீன்கள் இனப்பெருக்கம் மற்றும் வளர்ப்பு" குறித்த 5 நாள் பயிற்சி முகாம் ஆகஸ்ட் 17 முதல் 21 வரை வெற்றிகரமாக நடைபெற்றது.
ஆகஸ்ட் 17-ஆம் தேதி மண்டபம் பிராந்திய மையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மண்டபம் மையத் தலைவர் டாக்டர் வினோத் கே. மற்றும் தூத்துக்குடி நிலையப் பொறுப்பாளர் விஞ்ஞானி டாக்டர் எல். லவ்சன் எட்வர்ட் ஆகியோர் பயிற்சியைத் தொடங்கி வைத்தனர்.
பயிற்சியின் போது கடல் மீன்வள அருங்காட்சியகம், கடல் கூண்டு பண்ணை, இனப்பெருக்க மீன் வங்கி, RAS (மறுசுழற்சி நீர்வாழ் வளர்ப்பு அமைப்பு), மீன் மற்றும் இறால் குஞ்சு பொரிப்பகங்கள் பார்வையிடப்பட்டன. கிளவுன்ஃபிஷ் (Clownfish) மற்றும் டாம்சல்ஃபிஷ் (Damselfish) போன்ற மீன்களின் கட்டுப்படுத்தப்பட்ட இனப்பெருக்க முறைகள் மற்றும் மன்னார் வளைகுடா, பாக் நீரிணைப் பகுதிகளில் உள்ள கடல் வளங்கள் குறித்து விளக்கப்பட்டது.
பைட்டோபிளாங்க்டன் மற்றும் ஜூபிளாங்க்டன் வளர்ப்பு, RAS முறையில் மீன் குஞ்சுகளைப் பராமரித்தல் குறித்துப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தூத்துக்குடி பிராந்திய நிலையத்தில் அலங்கார நத்தை இனப்பெருக்கம், குஞ்சு வளர்ப்பு, RAS முறையில் நீரின் தரத்தைப் பராமரித்தல் மற்றும் தீவனக் கலவை தயாரிக்கும் முறைகள் குறித்து நேரடிப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
மேலும், "Marine Ornamental Fish Hub – Tuticorin: Opportunities for Sustainable Trade" என்ற சிறப்பு அமர்வில், நிலையான முறையில் கடல் அலங்கார மீன்களை உற்பத்தி செய்து வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்புகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
நேற்று ஆகஸ்ட் 21 மாலை தூத்துக்குடி பிராந்திய நிலையத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில், டாக்டர் லவ்சன் எட்வர்ட் பங்கேற்றுப் பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார். இப்பயிற்சியின் மூலம் பங்கேற்பாளர்கள் கடல் அலங்கார மீன் குஞ்சு பொரிப்பக மேலாண்மை, ஊட்டச்சத்து, நோய் மற்றும் சுகாதார மேலாண்மை மற்றும் நிலையான வளர்ப்பு முறைகளில் சிறந்த நடைமுறைத் திறனைப் பெற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்; 7 பேர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:39:29 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தொடக்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:15:46 PM (IST)

தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதா; ஆளுநர் ஒப்புதல்
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:41:25 PM (IST)

திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 10:46:24 AM (IST)

ஆகாஷ் டெலிஷன் மரணத்தில் 16 பேர் மீது புகார்; 6 பேர் மட்டுமே சேர்ப்பு: தாயார் ஆனந்தி ஆதங்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 10:41:02 AM (IST)

கொளத்தூரில் த.வெ.க. வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் வழக்கு: அடுத்த வாரம் விசாரணை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:02:57 PM (IST)


