» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதுபோதை தகராறில் வெறிச்செயல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 சிறுவர்கள் சிக்கினர்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 4:52:09 PM (IST)
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரைச் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த 3 சிறுவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சங்கரன்கோவில் சங்குபுரம் தெரு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் மாரியப்பன். சுமைத்தூக்கும் தொழிலாளியான இவருக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. திரு.வி.க. நகர் பகுதியிலுள்ள ஐயர் தோப்புப் பகுதியில் மாரியப்பன் முகம் மற்றும் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடப்பதாகச் சங்கரன்கோவில் நகரக் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சங்கரன்கோவில் சரகக் காவல் துணை கண்காணிப்பாளர் செங்கோட்டுவேலன் மற்றும் நகரக் காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த 23.08.2026 அன்று இரவு, மாரியப்பன் 3 சிறுவர்களுடன் (வயது 17, 16, 14) திரு.வி.க. நகர் ஐயர் கிணறு பகுதியில் மது அருந்தச் சென்றுள்ளார். மது அருந்துவதற்குத் தேவையான குடிநீர் பாட்டில், கிளாஸ் மற்றும் 'சைட் டிஷ்' வாங்கி வரச் சொல்லிச் சிறுவர்களை மாரியப்பன் அனுப்பி வைத்துள்ளார். சிறுவர்கள் தாமதமாக வந்ததால் ஆத்திரமடைந்த மாரியப்பன் அவர்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
போதை தலைக்கேறிய நிலையில், "எங்களை ஏன் அடித்தாய்?" எனக் கேட்டுச் சிறுவர்கள் மாரியப்பனுடன் தகராறில் ஈடுபட்டுத் திரும்பத் தாக்கியுள்ளனர். தொடர்ந்து 3 சிறுவர்களும் சேர்ந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாரியப்பனைச் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு உடலை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர்.
இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட 3 சிறுவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இளைஞர் ஒருவரை 3 சிறுவர்கள் சேர்ந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்; 7 பேர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:39:29 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தொடக்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:15:46 PM (IST)

தமிழ்வழியில் படித்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் மசோதா; ஆளுநர் ஒப்புதல்
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:41:25 PM (IST)

திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 10:46:24 AM (IST)

ஆகாஷ் டெலிஷன் மரணத்தில் 16 பேர் மீது புகார்; 6 பேர் மட்டுமே சேர்ப்பு: தாயார் ஆனந்தி ஆதங்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 10:41:02 AM (IST)

கொளத்தூரில் த.வெ.க. வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் வழக்கு: அடுத்த வாரம் விசாரணை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:02:57 PM (IST)


