» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் விவகாரம்: அமைச்சரிடம் உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 3:36:28 PM (IST)

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளத்திற்காக உப்பள நிலங்களைக் கையகப்படுத்துவதைக் கைவிடக் கோரி, உப்பு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் சென்னையில் தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
தூத்துக்குடி கடற்கரையை ஒட்டியுள்ள முள்ளக்காடு பகுதியில் அமைந்திருக்கும் கோவளம், பசுவந்தனை, தன்பாடு ஆகிய சிறிய அளவு உப்பள நிலங்களை, புதிய கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக நில கையகப்படுத்தல் செய்ய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதற்கு எதிராகவும், தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரியும் அப்பகுதியைச் சேர்ந்த உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் இணைந்து பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் தொடர்ச்சியாக, தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் சென்னைக்குச் சென்று, தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளருமான ஆனந்தை நேரில் சந்தித்து உப்பள நிலங்களைக் கையகப்படுத்துவதைத் தவிர்க்க வலியுறுத்தி, தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் வழங்கினர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் புஷ்ஸி ஆனந்த், இக்கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் நேரில் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்தச் சந்திப்பின் போது உப்பு உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் சேகர், நிர்வாகிகள் பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், பாலசுப்பிரமணியன் மற்றும் சங்கத்தின் பிற முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 5:39:23 PM (IST)

திமுக எம்எல்ஏக்களுக்கு அரசு வழங்கும் கார் வேண்டாம் - சட்டப்பேரவையில் உதயநிதி அறிவிப்பு
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 12:23:23 PM (IST)

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா சந்திப்பு
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 11:12:07 AM (IST)

சட்டசபையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று சந்தேகம் வருகிறது - உதயநிதி குற்றச்சாட்டு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 11:02:20 AM (IST)

மேடையில் நாஞ்சில் சம்பத் மீது நாற்காலி வீச்சு: இடும்பாவனம் கார்த்திக் பரபரப்பு விளக்கம்!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:57:20 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)


