» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2/2A தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வருகிற 24ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஆண்டுதோறும் அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு பல்வேறு போட்டித்தேர்வுகளை நடத்துகிறது. 2026ஆம் ஆண்டு குரூப்-II/IIA தேர்விற்கான அறிவிக்கை 11.08.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வு 01.11.2026 நடைபெறும் எனவும், மொத்த பணிக்காலியிடங்கள் 821 எனவும் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
TNPSC Group-II/IIA தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் பொருட்டு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து TNPSC Group-II/IIA தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24.08.2026 (திங்கட்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திறன் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு Smart Board வசதியுடன் நடத்தப்படுகிறது. வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அலுவலக நூலகத்தில் உள்ளன.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள திருவனந்தபுரம் ரோடு, ரயில்வேகேட் அருகில், குலவணிகர்புரம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்திற்கு 24.08.2026 அன்று காலை 10.30 மணிக்கு Passport Size புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரில் வருமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு 9499055929 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் மற்றும் NELLAI EMPLOYMENT OFFICE என்ற TELEGRAM CHANNEL-இல் இணைந்து பயிற்சி குறித்த தகவல்களை பெறலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 5:39:23 PM (IST)

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் விவகாரம்: அமைச்சரிடம் உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 3:36:28 PM (IST)

திமுக எம்எல்ஏக்களுக்கு அரசு வழங்கும் கார் வேண்டாம் - சட்டப்பேரவையில் உதயநிதி அறிவிப்பு
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 12:23:23 PM (IST)

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா சந்திப்பு
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 11:12:07 AM (IST)

சட்டசபையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று சந்தேகம் வருகிறது - உதயநிதி குற்றச்சாட்டு!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 11:02:20 AM (IST)

மேடையில் நாஞ்சில் சம்பத் மீது நாற்காலி வீச்சு: இடும்பாவனம் கார்த்திக் பரபரப்பு விளக்கம்!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:57:20 AM (IST)


