» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விவாகரத்து வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகாத முதல்-அமைச்சர் விஜய்... விசாரணை ஒத்திவைப்பு
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:58:25 AM (IST)
தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு விசாரணை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், கணவரிடமிருந்து விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்றும், ஜீவனாம்சம் மற்றும் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமை வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இவ்வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இருவரும் நேரில் ஆஜராகாமல் அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகினர். பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால் பாதுகாப்பு மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்று இருதரப்பு வழக்கறிஞர்களும் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து கடந்த ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, இருவரையும் சமரச மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குத் (இன்று) தள்ளிவைத்துப் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருவதிலும், அதில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றிருப்பதாலும் அவரால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை இன்று மதியத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)

கருணாநிதி நினைவு நாள்: மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:31:40 PM (IST)

திருத்தணியில் சேகர்பாபு கார் தடுத்து நிறுத்தம்: போலீசாருடன் வாக்குவாதத்தால் பரபரப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:09:11 PM (IST)

திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:51:14 AM (IST)

மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 11:03:58 AM (IST)

தமிழ்நாட்டு மக்களுக்காக அவமானத்தையும் தாங்க நான் தயார்: முதலமைச்சர் விஜய்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 10:42:14 AM (IST)


