» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்வு!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:42:22 AM (IST)

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாகச் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்ந்துள்ளது. குற்றால அருவிகளில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், அணைகளுக்கான நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணை: 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 898 கன அடியிலிருந்து 5,083 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 68.35 அடியை எட்டியுள்ளது.
சேர்வலாறு அணை: 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 76.77 அடியிலிருந்து ஒரே நாளில் 25 அடி உயர்ந்து 102 அடியைத் தாண்டியுள்ளது. அணைப் பகுதிகளில் மழை தொடர்ந்து நீடிப்பதால் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவியில் நடைபாதையைத் தாண்டித் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சாரல் திருவிழா மற்றும் வார விடுமுறை காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிந்த போதிலும், பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நீர்வரத்து குறையும் பட்சத்தில் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலும் திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது; மீறினால் அபராதம்: உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:52:31 PM (IST)

எட்டயபுரம் அருகே 15 ஆண்டுகளாகக் குடிநீரின்றித் தவிக்கும் கிராம மக்கள்: அதிகாரிகள் அலட்சியம்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:41:01 PM (IST)

மாற்றுக் கட்சியிலிருந்து இணைந்த நிர்வாகிகளுக்கு தவெகவில் முக்கியப் பொறுப்புகள்: விஜய் அறிவிப்பு
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:12:06 PM (IST)

அதிக மதிப்புள்ள கனிமங்களுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தி விற்பனை: புதிய அரசாணை வெளியீடு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:04:00 PM (IST)

பாளை., சிறைக்குச் சென்ற கனிமொழி எம்.பி.! - மார்க்கண்டேயன் எம்எல்ஏவுடன் நேரில் சந்திப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி பட்டாசு திருட்டு வழக்கு : த.வெ.க. வழக்கறிஞர் அணி நிர்வாகி உள்பட 6 பேர் கைது!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:17:39 PM (IST)


