» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாளை., சிறைக்குச் சென்ற கனிமொழி எம்.பி.! - மார்க்கண்டேயன் எம்எல்ஏவுடன் நேரில் சந்திப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:49:01 PM (IST)

பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை கனிமொழி எம்பி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தமிழக முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயனுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த மாதம் (ஜூலை) 18-ஆம் தேதி நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், தமிழக முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மார்க்கண்டேயனைப் போலீசார் ஜூலை 20-ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்குப் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரில் சென்ற தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி., விரைவில் விடுதலையாக உள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முன்னதாக, கடந்த ஜூலை 21-ஆம் தேதியும் பாளையங்கோட்டை சிறைக்குச் சென்று மார்க்கண்டேயனை கனிமொழி எம்.பி. சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது; மீறினால் அபராதம்: உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:52:31 PM (IST)

எட்டயபுரம் அருகே 15 ஆண்டுகளாகக் குடிநீரின்றித் தவிக்கும் கிராம மக்கள்: அதிகாரிகள் அலட்சியம்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:41:01 PM (IST)

மாற்றுக் கட்சியிலிருந்து இணைந்த நிர்வாகிகளுக்கு தவெகவில் முக்கியப் பொறுப்புகள்: விஜய் அறிவிப்பு
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:12:06 PM (IST)

அதிக மதிப்புள்ள கனிமங்களுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தி விற்பனை: புதிய அரசாணை வெளியீடு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:04:00 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி பட்டாசு திருட்டு வழக்கு : த.வெ.க. வழக்கறிஞர் அணி நிர்வாகி உள்பட 6 பேர் கைது!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:17:39 PM (IST)

சாதி, மதமற்றவர் சான்றிதழ் கோரி பார்த்திபன் வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:12:06 PM (IST)


