» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக கூட்டணி அமோக வெற்றி பெறும்: அமைச்சர் ஸ்ரீநாத் பேச்சு!
திங்கள் 13, ஜூலை 2026 7:53:51 AM (IST)

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக கூட்டணி அமோக வெற்றி பெறும் எனத் தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி பேயன்விளையில் மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தொழிலதிபரும், உப்பு உற்பத்தியாளருமான ஸ்ரீராம் விக்னேஸ்வரன் தலைமை வகித்தார். இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அமைச்சர் ஸ்ரீநாத் முன்னிலையில் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ஸ்ரீநாத், பொதுமக்களின் நலனுக்காக அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கத் தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் எனக் குறிப்பிட்டார். இதற்கேற்ப, மக்களின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் உடனடியாகப் பூர்த்தி செய்து கொடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும், திரண்டுள்ள மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது, கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியைப் போலவே, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் தவெக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் முழுமையாக வெற்றி பெறுவார்கள் என்றார்.
இந்நிகழ்ச்சியில் தவெக தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் பிரைட்டர், வடக்கு மாவட்டச் செயலாளர் சாமுவேல், தெற்கு மாவட்டப் பொருளாளர் சீமான் சிவக்குமார், மாவட்டத் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பேர்ல்ஸ் மபத்லால், நகரச் செயலாளர் நிவாஸ் கண்ணன், நகரச் செயல்வீரர் வினித் ஜோசப், சென்னை தொழிலதிபர்கள் விநாயகமூர்த்தி, ரமேஷ் கிருஷ்ணன், மதன் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)

2031-ல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம்: பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை உறுதி!
திங்கள் 13, ஜூலை 2026 11:53:56 AM (IST)

மாநகராட்சி ஒப்பந்தப் பணியில் அலட்சியம் : ராட்சத குழாய் விழுந்து சிறுவன் பலி; தந்தை காயம்!
திங்கள் 13, ஜூலை 2026 11:18:19 AM (IST)

எழுத்தாளர் பூமணி மறைவு தமிழ் சமூகத்திற்குப் பேரிழப்பு: இயக்குநர் மாரி செல்வராஜ் இரங்கல்
திங்கள் 13, ஜூலை 2026 11:06:57 AM (IST)

பூமணி மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு : கனிமொழி எம்.பி. இரங்கல்!
திங்கள் 13, ஜூலை 2026 10:51:31 AM (IST)

எழுத்தாளர் பூமணி மறைவு: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு - முதல்வர் விஜய் அறிவிப்பு!
திங்கள் 13, ஜூலை 2026 10:29:32 AM (IST)


