» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா? - கல்வெட்டு விவகாரத்தில் திமுக கடும் தாக்கு!
திங்கள் 6, ஜூலை 2026 12:50:06 PM (IST)

சென்னையின் குடிநீர்த் தேவையைத் தீர்க்கும் நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது அலகுக்கான அடிக்கல் கல்வெட்டிலிருந்து முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் நீக்கப்பட்டதற்கு திமுக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாகத் திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: "சென்னையின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்காக கடந்த 2006-ஆம் ஆண்டில் திமுக அரசு நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. கலைஞர் முதல்வராக இருந்தபோது, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் இந்தத் திட்டத்திற்கான அனைத்துப் பூர்வாங்க ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்து நிறைவேற்றினார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2021-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்ற நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு 24-02-2024 அன்று நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டினார்" என்று விவரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "தற்போது இந்த இரண்டாம் அலகு பணிகள் ஏறத்தாழ முழுமையாக நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்நிலையில், இப்பணிகளைப் பார்வையிட தற்போதைய முதல்வர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய இரண்டாம் அலகு திட்டத்தின் கல்வெட்டைத் தவெக அரசு அடியோடு அகற்றியிருக்கிறது.
ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான புதிய திட்டத்தையும் உருவாக்க வக்கில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அரசின் முதல்வர் தொடங்கிய திட்டத்தின் அடிக்கல்லை அகற்றுவது அதன் பயபீதியையே தெளிவாகக் காட்டுகிறது. முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது தனது ஸ்டிக்கரை ஒட்டுவதற்காக, பழைய கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற விஜய் அரசே?" என்று திமுக தலைமை தனது அறிக்கையில் மிகக் கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க திமுக ரூ.50 கோடி பேரம் : எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு!
திங்கள் 6, ஜூலை 2026 5:34:31 PM (IST)

தவெக அரசு தமிழகத்திற்கு நல்லது செய்தால் வரவேற்போம்: அண்ணாமலை விளக்கம்!
திங்கள் 6, ஜூலை 2026 5:17:54 PM (IST)

மேகேதாட்டுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம்: தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம்!
திங்கள் 6, ஜூலை 2026 4:44:03 PM (IST)

திருச்செந்தூர் கோயில் சேவைக் கட்டண உயர்வு: கருத்து தெரிவிக்க ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 4:01:49 PM (IST)

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு தனி விளையாட்டு அரங்கம்: ஆட்சியரிடம் கோரிக்கை மனு!
திங்கள் 6, ஜூலை 2026 3:30:41 PM (IST)

பயன்பாடின்றி முடங்கிய பேட்டரி கார் சேவை: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் அவலம்!
திங்கள் 6, ஜூலை 2026 3:21:52 PM (IST)


