» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கவின் கொலை வழக்கில் 2வது குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு - தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
திங்கள் 15, ஜூன் 2026 12:22:57 PM (IST)

மென் பொறியாளர் கவின் கொலை வழக்கில் 2வது குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஐடி பொறியாளர் கவின், இவர் நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய காதலியின் அப்பா காவல் உதவி ஆய்வாளர் பணிபுரிந்த சரவணன், அம்மா கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் உள்ளிட்டோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் 2வது குற்றவாளியான சுர்ஜித்தின் தந்தை சரவணனுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவினின் தாய், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர், கவின் செல்வகணேஷ் சாதி ஆணவ படுகொலை வழக்கில் எஸ்ஐ சரவணனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய பிணையை உடனே ரத்து செய்ய, தமிழ்நாடு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கோரியும், தமிழ்நாடு அரசின் சார்பில் கவின் செல்வகணேஷ் சாதி ஆணவ படுகொலை வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக ப.பா.மோகனை உடனே நியமனம் செய்ய கோரியும், சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனே ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்புச் சட்டம் இயற்ற கோரியும், கவின் செல்வகணேஷ் சாதி ஆணவ படுகொலையில் ஈடுபட்ட A2 A3 A4 ஆகிய குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் 50 பெண்கள் உட்பட200-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொ்ணடனர். இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான 50க்கும்மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர். பின்னர் 4 பேர் மட்டும் ஆட்சியரிடம் நேரில் சென்று மனு அளித்தனர். இந்த போராட்டம் எதிரொலியாக ஆட்சியர் அலுவல வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவள்ளூரில் 3 வயது குழந்தை பாலியல் படுகொலை சம்பவம்: காவல்துறை விளக்கம்
திங்கள் 15, ஜூன் 2026 12:50:36 PM (IST)

கப்பல் கட்டும் தளம் திட்டத்தில் முதல்வர் சரியான முடிவெடுப்பார்: தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் பேட்டி!
திங்கள் 15, ஜூன் 2026 12:38:31 PM (IST)

ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை விடுவிப்பு : தவெக ஆட்சியில் 2வது முறை!
திங்கள் 15, ஜூன் 2026 12:33:25 PM (IST)

3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை படுகொலை - தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
திங்கள் 15, ஜூன் 2026 12:30:12 PM (IST)

உயிரிழந்த கணவரின் சடலத்துடன் 3 நாட்களாக வீட்டிற்குள் முடங்கிய மனைவி, மகள்!
திங்கள் 15, ஜூன் 2026 12:27:22 PM (IST)

நெல்லை சரகத்தில் 19 இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் - டிஐஜி திருநாவுக்கரசு உத்தரவு!
திங்கள் 15, ஜூன் 2026 11:01:56 AM (IST)


