» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் கொடிகட்டிப் பறக்கும் லாட்டரி விற்பனை: பொதுமக்கள் குற்றச்சாட்டு!
வியாழன் 11, ஜூன் 2026 3:11:40 PM (IST)
தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளின் விற்பனை எவ்வித அச்சமுமின்றி அமோகமாக நடைபெற்று வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது லாட்டரி சீட்டுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து வந்த திமுக ஆட்சியிலும் இந்தத் தடை தொடர்ந்ததுடன், விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனினும், ஒரு சில இடங்களில் மறைமுகமாக ஆன்லைன் மற்றும் கேரளா லாட்டரிகள் விற்கப்பட்டு வந்தன.
தற்போதைய நிலை:
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் அவர்கள் தலைமையில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, கடந்த ஒரு மாத காலமாக லாட்டரி விற்பனை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்கள் மூலம் பொதுவெளியில் சர்வ சாதாரணமாக லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டு வருகின்றன. தற்போது சாதாரணப் பெட்டிக்கடைகளில் கூட இந்த விற்பனை பரவியுள்ளது.
லாட்டரி விற்பனை நடக்கும் இடங்கள் குறித்துத் தெரிந்திருந்தும், காவல்துறையினர் முறையான நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுக்கும் போது மட்டும், பெயரளவிற்கு ஒரு சிலரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்வதோடு தங்களது கடமையை முடித்துக் கொள்கின்றனர் எனச் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்தத் திடீர் லாட்டரி மோகத்தால், அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் தாங்கள் சம்பாதிக்கும் 300 முதல் 400 ரூபாய் வரையிலான பணத்தை வீட்டிற்குத் தராமல் லாட்டரி சீட்டுகளில் முடக்குகின்றனர். இதனால் ஏழைக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
"பெட்டிக்கடைகள் வரை பரவியுள்ள இந்த லாட்டரி கலாச்சாரத்தால் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரம் சீரழிந்து வருகிறது. எனவே, பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டப் பகுதிகளில் கொடிகட்டிப் பறக்கும் லாட்டரி விற்பனையைத் தமிழக அரசும், காவல் துறையும் உடனடியாக முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும்." என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான ஆகஸ்டு மாதத்தில் இடைத்தேர்தல்? ஜூலை இறுதியில் அறிவிப்பு
வியாழன் 11, ஜூன் 2026 8:37:05 PM (IST)

மத்திய அரசில் 12,256 பணியிடங்களுக்கு ஜூன் 22-க்குள் விண்ணப்பம்: ஜூன் 17-ல் வகுப்புகள் துவக்கம்!
வியாழன் 11, ஜூன் 2026 5:09:03 PM (IST)

இளம்பெண் மரணம்: ஆணவக் கொலை அல்ல - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விளக்கம்!
வியாழன் 11, ஜூன் 2026 3:42:03 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் - மதுரை, உவரி - தூத்துக்குடி தடத்தில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுமா?
வியாழன் 11, ஜூன் 2026 3:24:23 PM (IST)

குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட தவெக எம்.எல்.ஏ பதவி நீக்கம் - உதயநிதி வலியுறுத்தல்!
வியாழன் 11, ஜூன் 2026 12:54:15 PM (IST)

சென்னை தி.நகரில் 1 கிலோ வைர நகைகள் திருட்டு; கொள்ளையனின் மனைவி தளவாய்புரத்தில் கைது!
வியாழன் 11, ஜூன் 2026 12:48:50 PM (IST)



ஆதவ்Jun 11, 2026 - 03:16:12 PM | Posted IP 104.2*****