» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் ஆய்வு!
புதன் 10, ஜூன் 2026 4:58:52 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இராதாபுரம் தோமையார்புரம் பகுதியில் தூண்டில் வளைவு மற்றும் விஜயாபதி ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் தோமையார்புரம் பகுதியில் ரூ.16.05 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் நடைபெற்று வருவது தொடர்பாகவும், தூண்டில் வளைவு அமையவுள்ள இடம் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர் துறைசார்ந்த அலுவலர்களுடன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்
தொடர்ந்து, இராதாபுரம் வட்டாட்சியர் அலுவலகம், விஜயாபதி கிராம ஊராட்சி அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், விஜயாபதி ஊராட்சியில் நபார்டு சாலை மேம்பாட்டு பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.1.90 கோடி மதிப்பில் 2.77 கி.மீ நீளம் சாலை மற்றும் பாலப் பணிகள் நடைபெறுவது குறித்தும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சிலுவையன் பிள்ளை கால்வாய் அகலப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும், விஜயாபதி ஊராட்சி பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.43.50 இலட்சம் மதிப்பில் 750 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்ட சாலையின் தரம் குறித்தும், இடிந்தகரை பகுதியில் அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 150 வீட்டு குடிநீர் இணைப்புகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
ஆய்வில், உதவி இயக்குநர் (தணிக்கை ஊராட்சிகள்) இங்கர்சால், இராதாபுரம் வட்டாட்சியர் வில்லுடையார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமுவேல்ராஜ், அகஸ்தஷ் அலெக்ஸ், பொறியாளர் செல்வி.சுதா, மீன்வளத்துறை அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)

பா.ஜ.க. மாநில நிர்வாகி அலிஷா அப்துல்லா குறித்து அவதூறு பேச்சு: யூடியூபர் முக்தார் கைது
புதன் 10, ஜூன் 2026 3:44:20 PM (IST)

ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம்: ஜூன் 12ஆம் தேதி போராட்டம் - விவசாயிகள் முடிவு!
புதன் 10, ஜூன் 2026 3:20:38 PM (IST)

தூத்துக்குடியில் பணத் தகராறில் வாலிபருக்குக் கத்திக்குத்து: ஒருவர் கைது - மேலும் 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
புதன் 10, ஜூன் 2026 12:58:11 PM (IST)

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் : 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவு
புதன் 10, ஜூன் 2026 11:42:13 AM (IST)

இன்ஸ்டாகிராம் காதலை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை - போலீஸ் விசாரணை!
புதன் 10, ஜூன் 2026 11:13:43 AM (IST)


