» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி மாத உத்திரட்டாதி நட்சத்திர வருஷாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கருட வாகன சேவையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நவதிருப்பதிகளில் ஒன்பதாவது திருப்பதியும், நம்மாழ்வார் அவதாரத் தலமுமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்த நாளை முன்னிட்டு, வருஷாபிஷேகம் சிறப்பாக நடத்தப்படுவது வழக்கமாகும். அதன்படி, நடப்பு ஆண்டிற்கான வருஷாபிஷேக வழிபாடுகள் நேற்று அதிகாலை முதலே தொடங்கின.
நேற்று காலை 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், தொடர்ந்து காலை 8:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்குச் சிறப்புத் திருமஞ்சனமும் நடைபெற்றன. பின்னர் காலை 10:00 மணியளவில் உற்சவர் பொலிந்து நின்ற பிரான், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆதிநாயகி, குருகூர் நாயகி தாயார்களுடன் சயனக்குறட்டிற்கு எழுந்தருளினார். அதேநேரத்தில், நம்மாழ்வார் பெரிய கோவிலில் எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்குப் பலவண்ண மலர்களால் விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. மதிய வழிபாட்டின் போது வைணவ மரபுப்படி நாலாயிர திவ்ய பிரபந்த சேவாகாலம் மிக பக்தி சிரத்தையுடன் சேவிக்கப்பட்டது. சாத்துமுறை வழிபாடுகள் முறைப்படி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முகாமில் திரண்டிருந்த ஆன்மிக அன்பர்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்தம், சடாரி மற்றும் பிரசாதங்கள் முறைப்படி வழங்கப்பட்டன.
மாலையில் தொடர்ந்த விழாவினைக் காணப் பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆன்மிகப் பெரியோர்கள் திரண்டனர். மாலை 5:00 மணிக்குச் சாயரட்சை பூஜையைத் தொடர்ந்து, உற்சவர் பொலிந்து நின்ற பிரான் மற்றும் நம்மாழ்வார் ஆகியோர் சயனக்குறட்டில் இருந்து வாகனக்குறட்டிற்கு முறைப்படி எழுந்தருளினார்கள். அங்கு வாகனங்களுக்குரிய பிரத்யேகப் பூசைகளும், மந்திர ஆராதனைகளும் நடைபெற்றன.
விழாவின் சிகர நிகழ்வாக, இரவு 7:30 மணியளவில் மங்கள வாத்தியங்கள் முழங்க, தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் பொலிந்து நின்ற பிரானும், அன்ன வாகனத்தில் நம்மாழ்வாரும் பிரம்மாண்டமாக எழுந்தருளினர். இரவு 8:00 மணிக்குக் குட வருவாயில் இரு மூர்த்திகளுக்கும் கண் கொள்ளாக் காட்சியாக மகா தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, பக்திப் பாடல்கள் மற்றும் திவ்ய பிரபந்த கோஷங்கள் முழங்க, உற்சவ மூர்த்திகள் இருவரும் ஆழ்வார்திருநகரியின் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள் பாலித்தனர். இத்திருவீதி உலாவில் ஆழ்வார்திருநகரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, கற்பூர ஆரத்தி எடுத்துத் துளசி பிரசாதம் பெற்றுச் சுவாமிகளைத் தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் ஆய்வு!
புதன் 10, ஜூன் 2026 4:58:52 PM (IST)

பா.ஜ.க. மாநில நிர்வாகி அலிஷா அப்துல்லா குறித்து அவதூறு பேச்சு: யூடியூபர் முக்தார் கைது
புதன் 10, ஜூன் 2026 3:44:20 PM (IST)

ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம்: ஜூன் 12ஆம் தேதி போராட்டம் - விவசாயிகள் முடிவு!
புதன் 10, ஜூன் 2026 3:20:38 PM (IST)

தூத்துக்குடியில் பணத் தகராறில் வாலிபருக்குக் கத்திக்குத்து: ஒருவர் கைது - மேலும் 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
புதன் 10, ஜூன் 2026 12:58:11 PM (IST)

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம் : 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவு
புதன் 10, ஜூன் 2026 11:42:13 AM (IST)

இன்ஸ்டாகிராம் காதலை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை - போலீஸ் விசாரணை!
புதன் 10, ஜூன் 2026 11:13:43 AM (IST)


