» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிளஸ்-2 மாணவி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை: தர்மமுனீஸ்வரன் மேல்முறையீடு செய்ய அவகாசம்!
சனி 6, ஜூன் 2026 8:50:49 AM (IST)
விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தர்மமுனீஸ்வரன் மேல்முறையீடு செய்வதற்கு அவகாசம் வழங்கி மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி, கடந்த மார்ச் மாதம் 10-ஆம் தேதி தனது வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது மாயமானார். மறுநாள் அங்குள்ள புதருக்குள் அவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அம்மாணவி மிகக் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் புலனாய்வில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரன் என்பவர் இக்கொடூரச் செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையில், இவர் ஏற்கனவே ஒரு மூதாட்டியைப் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் ஆயுள் தண்டை பெற்றவர் என்பதும், ஜாமீனில் வெளியே வந்திருந்த போதே இந்த பிளஸ்-2 மாணவியையும் பின்தொடர்ந்து படுகொலை செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இவ்வழக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் மிக அதிவேகமாக விசாரணை நடத்தப்பட்டது.
குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், தர்மமுனீஸ்வரனுக்குக் கடுமையான தூக்குத்தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்தது.
சட்ட விதிகளின்படி, இந்த மரண தண்டனையை உறுதி செய்வது மற்றும் நிறைவேற்றுவது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக, வழக்கின் அனைத்து முதன்மை ஆவணங்களையும் விளாத்திகுளம் போலீசார் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இக்கோப்புகளை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று நேரில் ஆய்வு செய்து விரிவான விசாரணை நடத்தியது.
விசாரணையின் போது வழக்கை ஆய்வு செய்த நீதிபதிகள், "பிளஸ்-2 மாணவி படுகொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தர்மமுனீஸ்வரன், தனக்கு விதிக்கப்பட்ட இந்த உச்சபட்சத் தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்குச் சட்டப்படியான போதிய கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்குகிறது. இதன் காரணமாக, இது தொடர்பான அனைத்து விசாரணைகளும் வரும் ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது," எனத் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
ஈசன் மா சுரேஷ்Jun 6, 2026 - 02:17:50 PM | Posted IP 104.2*****
அவனை வெளியே விடுங்கள். இன்னும் பலரை கற்பழிப்பு கொலை செய்யட்டும்.. நல்ல சட்டம் உங்க சட்டம். குள்றவாளிகளுக்கு சாதகமான சட்டம்... குப்பைக்கு சமம் உங்கள் சட்டம்
ஆமாJun 6, 2026 - 11:52:02 AM | Posted IP 162.1*****
தூக்குத்தண்டனை வாங்கி கொடுத்ததே திமுக ஆட்சியில் என்று ஒரு பொம்பிளை கூறுகிறதே , அது தமாஷ் ஆ
மேலும் தொடரும் செய்திகள்

ஜெர்மன் நிறுவனத்துடன் பசுமை எரிசக்தி வர்த்தகம் : தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை
சனி 6, ஜூன் 2026 5:40:06 PM (IST)

கொலை வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு எஸ்பி அபிஷேக் குப்தா பாராட்டு!
சனி 6, ஜூன் 2026 4:59:13 PM (IST)

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 4 பேர், முன்னாள் எம்எல்ஏக்கள் 10 பேர் தவெகவில் இணைந்தனர்!
சனி 6, ஜூன் 2026 4:08:18 PM (IST)

தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூவுக்குக் கடும் எதிர்ப்பு : அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
சனி 6, ஜூன் 2026 3:16:27 PM (IST)

தமிழகத்தைப் பொற்காலமாக மாற்றியது திராவிட மாடல் ஆட்சி தான்: சத்யராஜ் உருக்கம்!
சனி 6, ஜூன் 2026 11:34:53 AM (IST)

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர்: வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா!
சனி 6, ஜூன் 2026 11:19:04 AM (IST)



Eesan m sureshJun 6, 2026 - 02:18:28 PM | Posted IP 172.7*****