» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர்: வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா!
சனி 6, ஜூன் 2026 11:19:04 AM (IST)

நார்வேயில் நடைபெற்ற புகழ்பெற்ற 'நார்வே செஸ் 2026' தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, உலக செஸ் அரங்கில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா புதிய வரலாறு படைத்துள்ளார்.
இமாலயச் சாதனை படைத்த பிரக்ஞானந்தாவுக்குத் தமிழக முதல்வர் விஜய் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுப் பாராட்டியுள்ளார்.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில், சர்வதேச செஸ் ('கிளாசிக்கல்') 14-வது சீசன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில் 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் 'உலக நம்பர்-1 வீரர்' நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உள்ளிட்ட உலகின் மிக முக்கிய 6 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.
ஒன்பது சுற்றுகளின் முடிவில் சோ வெஸ்லே 15.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பிரக்ஞானந்தா 15.0 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பிரான்சின் அலிரேசா 14.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் இருந்தனர். மற்றொரு இந்திய வீரரான குகேஷ் 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருந்தார்.
இறுதிச் சுற்றில் அதிரடி காட்டிய பிரக்ஞானந்தா, தொடர்ந்து 3 போட்டிகளில் பெற்ற ஹாட்ரிக் வெற்றியின் உத்வேகத்துடன், ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை எதிர்கொண்டார். இப்போட்டியின் ஆரம்பம் முதலே கறாரான ஆதிக்கத்தைச் செலுத்திய பிரக்ஞானந்தா, 45-வது நகர்த்தலின் போது வின்சென்ட் கெய்மரை வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றார். அதே நேரத்தில், முதலிடத்தில் இருந்த வெஸ்லே மற்றும் அலிரேசா மோதிய போட்டி 'டிரா'வில் முடிவடைந்தது. இதன் மூலம் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்த பிரக்ஞானந்தா, நார்வே செஸ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தார்.
முதல்வர் விஜய் வாழ்த்து
தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தள வாழ்த்து விபரம்:" நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா புதிய சாதனைகளைப் படைத்திட எனது வாழ்த்துகள்," எனத் தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் விஜய் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
கார்ல்சன் கோட்டையிலேயே கைவரிசை:
உலக செஸ் அரங்கில் அசைக்க முடியாத சக்கரவர்த்தியாகவும், உலக நம்பர்-1 வீரராகவும் திகழும் மாக்னஸ் கார்ல்சனின் சொந்த மண்ணான நார்வேயிலேயே, அவரது ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துப் பிரக்ஞானந்தா இப்பட்டத்தை வென்றுள்ளது உலக செஸ் ரசிகர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெர்மன் நிறுவனத்துடன் பசுமை எரிசக்தி வர்த்தகம் : தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை
சனி 6, ஜூன் 2026 5:40:06 PM (IST)

கொலை வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு எஸ்பி அபிஷேக் குப்தா பாராட்டு!
சனி 6, ஜூன் 2026 4:59:13 PM (IST)

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 4 பேர், முன்னாள் எம்எல்ஏக்கள் 10 பேர் தவெகவில் இணைந்தனர்!
சனி 6, ஜூன் 2026 4:08:18 PM (IST)

தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூவுக்குக் கடும் எதிர்ப்பு : அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
சனி 6, ஜூன் 2026 3:16:27 PM (IST)

தமிழகத்தைப் பொற்காலமாக மாற்றியது திராவிட மாடல் ஆட்சி தான்: சத்யராஜ் உருக்கம்!
சனி 6, ஜூன் 2026 11:34:53 AM (IST)

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: 3-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
சனி 6, ஜூன் 2026 10:30:58 AM (IST)


