» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாரில் ஏற்பட்ட தகராறில் இலங்கை இளம்பெண் கார் ஏற்றிக் கொலை: சென்னையில் கொடூரம்!

திங்கள் 1, ஜூன் 2026 12:37:28 PM (IST)

சென்னையில் நட்சத்திர ஹோட்டல் மதுபான பாரில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில், இலங்கை இளம்பெண் ஒருவர் சொகுசு கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் மதுபான பாரில் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு மதுபான பாரில் இரு தரப்பினரிடையே நடனமாடுவது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பவுன்சர்கள் அவர்களை வெளியேற்றிய பிறகும் வெளியிலும் மோதல் தொடர்ந்தது.

மோதலில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் 3 பைக்குகளிலும், மற்றொரு தரப்பினர் தங்களது சொகுசு காரிலும் அங்கிருந்து புறப்பட்டனர். கோயம்பேடு மேம்பாலத்தின் கீழே சென்றபோது, பைக்கில் சென்றவர்கள் காரின் மீது கற்களை வீசித் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த காரில் இருந்தவர்கள், பைக்கின் மீது சொகுசு காரை அதிவேகமாக மோதினர். இதில் பைக்கை ஓட்டிச் சென்ற யான்சி (18) என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த பவுசி தீபிகா (17) என்ற சிறுமி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த யான்சி, விழுப்புரம் மாவட்டம் அனிச்சம்குப்பம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இன்ஸ்டாகிராம் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மதுபாருக்குச் சென்றபோது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கோயம்பேடு போலீஸார் நடத்திய விசாரணையில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த பாலகுரு (21), கல்லூரி மாணவர்கள் ஜோஷ்வா (19), கிஷோர்குமார் (19) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், திமுக கொடி கட்டிய காரில் வந்த சுமந்த் சக்திவேல் உட்பட 4 மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொல்லப்பட்ட யான்சியின் தாய் மேரி ஸ்டெல்லா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனது மகளின் உடலைப் பார்த்து, "என் மகளின் கொலைக்கு நீதி வேண்டும்; குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" எனக் கண்ணீருடன் கதறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory