» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காங்கிரஸ் தலைவர் மீது கொலை முயற்சி தாக்குதல் - திமுக முன்னாள் அமைச்சர் மீது எஸ்.பி.,யிடம் புகார்!

திங்கள் 1, ஜூன் 2026 11:51:03 AM (IST)



தூத்துக்குடியில் காங்கிரஸ் மாநகர மாவட்டத் தலைவர் மீதான கொலை முயற்சிச் சம்பவத்திற்குத் தூண்டுதலாக இருந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மாநகர மாவட்டத் தலைவர் எஸ்.எம். சகாயராஜ் அளித்துள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அண்மையில் ராகுல் காந்தியை அவதூறாகப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணனைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் அறவழியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனை மனதில் வைத்துக்கொண்டு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர் உமரி சங்கர் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் காங்கிரஸ் கட்சியினருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, கடந்த மே 20, 2026 அன்று இரவு, திமுகவைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் ஆட்டோ தொழிலாளி காமராஜின் ஆட்டோவைச் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், பயங்கர ஆயுதங்களுடன் அவரது வீட்டிற்குள் நுழைந்து அவரைக் கொலை செய்ய முயன்றபோது, காமராஜ் கதவை பூட்டிக்கொண்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடத்திய 2 பேர் உட்பட 3 பேரைக் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் போக, இச்சம்பவத்திற்குப் பின்னணியில் இருந்து தங்களது கூலிப்படை மூலம் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உமரி சங்கர் ஆகிய இருவரையும் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகச் சேர்த்துச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வின் போது, காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கோபால், ராகுல் காந்தி அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் சங்கம் செயலாளர், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் டி. சாமுவேல் ஞானதுரை, தலைவர் செல்வசேகர், இணைச் செயலாளர் பலவேச கார்த்திகேயன், துணைத் தலைவர் சுடலைமணி, துணை செயலாளர் ஞானமுத்து, மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பாலகிருஷ்ணன் அழகுராஜ் கிருஷ்ணன் அய்யாதுரை ஜோதி மகாலட்சுமி உள்பட பலர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory