» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் புதிய டீன் பொறுப்பேற்பு: அமைச்சர் ஸ்ரீநாத் வாழ்த்து!
திங்கள் 1, ஜூன் 2026 12:15:42 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய டீன் ஆக மயக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் இ.எபினேசர் ஜோயல் குமார் பொறுப்பேற்றுள்ளார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் டீனாக பணிபுரிந்து வந்த சிவக்குமார் அண்மையில் தனது அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறை பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த டாக்டர் இ.எபினேசர் ஜோயல் குமார் புதிய டீனாக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் இன்று காலை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் முறைப்படி கோப்புகளில் கையெழுத்திட்டுப் புதிய டீன் ஆகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய டீன் ஆகப் பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அவர் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத்தை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாகப் பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, டாக்டர் பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாரில் ஏற்பட்ட தகராறில் இலங்கை இளம்பெண் கார் ஏற்றிக் கொலை: சென்னையில் கொடூரம்!
திங்கள் 1, ஜூன் 2026 12:37:28 PM (IST)

காங்கிரஸ் தலைவர் மீது கொலை முயற்சி தாக்குதல் - திமுக முன்னாள் அமைச்சர் மீது எஸ்.பி.,யிடம் புகார்!
திங்கள் 1, ஜூன் 2026 11:51:03 AM (IST)

தூத்துக்குடியில் முன்னாள் கோவில் தர்மகர்த்தாவுக்கு அரிவாள் வெட்டு! – 2பேர் கைது!
திங்கள் 1, ஜூன் 2026 11:04:16 AM (IST)

பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கிய 10 பேர் கும்பல்: தூத்துக்குடி அருகே பரபரப்பு!
திங்கள் 1, ஜூன் 2026 8:35:47 AM (IST)

குப்பை வண்டியில் தவறுதலாகப் போட்ட 5 பவுன் சங்கிலி மீட்பு - தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு!
திங்கள் 1, ஜூன் 2026 8:29:01 AM (IST)

திருச்செந்தூரில் 80 அடி தூரம் உள்வாங்கிய கடல்: பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடல்!
திங்கள் 1, ஜூன் 2026 8:18:06 AM (IST)


