» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம்: காங்கிரஸ், அதிமுக அதிருப்தி குழு ஆதரவு!
புதன் 13, மே 2026 10:18:25 AM (IST)

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானம் இன்று முன்மொழியப்பட்டது.
சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், தனது அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாக முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் ஆதரவு உறுப்பினர்களின் உரைகள் தொடங்கின.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் உரையாற்றினார். மேலும் விசிக, இடதுசாரி கட்சிகள், ஐயூஎம்எல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட காமராஜ், அதிமுகவிலிருந்து பிரிந்த சி.வி.சண்முகம் தலைமையிலான குழுவினரும் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர்.
சட்டப்பேரவையின் தற்போதைய நிலவரப்படி பெரும்பான்மையை நிரூபிக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. மொத்த உறுப்பினர்கள்: 232 (சபாநாயகர் தவிர்த்து). திருச்சி கிழக்கில் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததாலும், திருப்பத்தூர் தொகுதி உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு நீதிமன்றம் தடை விதித்ததாலும், சபாநாயகராக ஜே.சி.டி பிரபாகர் நியமிக்கப்பட்டதாலும் மூன்று வாக்குகள் குறைகின்றன.
தற்போது தவெக வசம் 105 நேரடி வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் மற்றும் அதிமுக அதிருப்தி குழுவின் ஆதரவோடு முதலமைச்சர் விஜய் மிக எளிதாகப் பெரும்பான்மையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் விஜய் தீர்மானத்தை முன்மொழிந்தபோது அவையில் பலத்த கரகோஷம் எழுந்தது. சென்னை கோட்டை மற்றும் சட்டப்பேரவை வளாகத்தைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கெடுப்பின் முடிவுகள் இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எடப்பாடி பழனிசாமி பதவி ஆசை: திமுகவுடன் கூட்டணி முயற்சி - சி.வி. சண்முகம் பரபரப்பு புகார்!
புதன் 13, மே 2026 4:57:47 PM (IST)

அமைச்சரவையில் நாடார் சமூக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: சமக தீர்மானம்!
புதன் 13, மே 2026 4:53:34 PM (IST)

குதிரை பேரப் புகார்: தவெக தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவதாக மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
புதன் 13, மே 2026 4:21:55 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

உளவுத்துறை ஐ.ஜி-யாக அஸ்ரா கர்க் நியமனம் : தமிழக அரசு உத்தரவு!
புதன் 13, மே 2026 3:44:08 PM (IST)

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: ஜோதிடர் நியமன அரசாணையை வாபஸ் வாங்கியது தமிழக அரசு!
புதன் 13, மே 2026 3:20:27 PM (IST)


